PUBLISHED ON : ஜன 26, 2014

ஐரோப்பாவில் உள்ள நீண்ட மலைத் தொடரான, ஆல்ப்ஸ் மலைத் தொடர், உலகின் முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த மலைத் தொடரில், இத்தாலி - பிரான்ஸ் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள, 1,200 அடி உயரமுடைய 'மவுன்ட் பிளாங்' என்ற மலைச் சிகரம் தான், மிக உயரமானது. இந்த, இரண்டு மலைகளுக்கு இடையே, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, ரோப் கார் இயங்குகிறது. இதில், இரண்டு ரோப்கார்களுக்கு நடுவில், மெல்லிய கம்பியை கட்டி, அந்த கம்பியில், 196 அடி தூரம் நடந்து, சாகசம் செய்துள்ளார், பிரான்சு நாட்டை சேர்ந்த, ஜூலியன் மில்லட் என்பவர். இது குறித்து கூறும் போது, 'உயரமான இடங்களில், கம்பியில் நடப்பது தான், என் பொழுது போக்கு. இதற்கு முன், பல அடி உயரமுள்ள இடங்களில் நடந்துள்ளேன். ஆனாலும், ஆல்ப்ஸ் மலை அனுபவம், வித்தியாசமாக இருந்தது...' என்கிறார் அவர்.
— ஜோல்னா பையன்.

