தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : ஜூலை 18, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

**கோ.விஜயா, சிவகாசி: எப்படிப்பட்ட மனிதரின் சகவாசம் தேவையில்லை நமக்கு?

?நமக்கு என்னவெல்லாம் நேரக்கூடாது என்று நினைக்கிறோமோ அது, அந்த மனிதரின் சகவாசத்தால் பிறருக்கு - மூன்றாம் மனிதருக்கு நிகழும் என்று தெரிந்தால், கும்பிடு போட்டு, காத தூரம் ஓடி விடுங்கள்!



*பா.இளங்கோ, விழுப்புரம்: பெண்களின் திருமண வயது 21 என்றால், ஆண்களின் திருமண வயது...

?கட்டிக் கொண்டவளை காப்பாற்றி, பிறரிடம் கையேந்தாத நாள் என்று வருகிறதோ - அந்த வயதே ஆணின் திருமண வயது!



*ஆ.குமாரகபிலன், திண்டுக்கல்: பிலிம் போட்டு படம் எடுக்கும் கேமராக்கள் காணமல் போய்விடும் போல உள்ளதே...

?உண்மைதான்! டிஜிட்டல் முறை வந்தபிறகு பிலிம் கேமராவின் மவுசு குறைந்து வருகிறது. 2003ல் பிலிம் கேமராக்களின் விற்பனையை டிஜிட்டல் கேமராக்கள் முந்தி விட்டன. 2004ம் ஆண்டுடன் ஈஸ்ட்மென் கொடாக் நிறுவனம், தன் கடைசி பிலிம் கேமராவை விற்று தீர்த்து விட்டது. அதாவது, உற்பத்தியை நிறுத்தியே விட்டது!



** ஜி.பாலசந்தர், ஸ்ரீவில்லிபுத்தூர்: லஞ்சம் வாங்குவது எந்த நாட்டில் முதலில் ஆரம்பித்தது?

?இஸ்ரேலில் என்பது சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்டது. ஆண்டவராகிய இயேசுநாதரை, 30 வெள்ளி காசுகளை லஞ்சமாக வாங்கி, யூதாஸ் ஸ்காரியோத் காட்டிக் கொடுத்தானே... அதற்கும் முன்னால் லஞ்சம் இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை!



*என்.சதீஷ்குமார், திருவண்ணாமலை: சைவம், அசைவம் - எந்த உணவு பழக்கம் நம் நாட்டில் பெருகி வருகிறது?

?"சைவம்தான் பெருகி வருகிறது...' என, "நேஷனல் சாம்பிள் சர்வே' கூறுகிறது. 7.1 சதவீதம் அசைவத்திற்கு செலவிடுவது குறைந்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு கூறுகிறது.



*ஆர்.செல்வமணி, சென்னை: முன்னேற துடிப்பவனிடம் இருக்கக் கூடாத விஷயங்கள் எவை?

?நேரத்தைப் பற்றிய அக்கறை இன்மை; நீண்ட தூக்கம், சோம்பேறித்தனம்; ஒத்திப் போடுதல் - இவற்றில் எது ஒன்று இருந்தாலும், முன்னேறுவது கடினம்!



*வி.கிருபாகரன், திருவனந்தபுரம்: காலை உணவாக இட்லி, தோசை போன்றவற்றை தயாரித்து உண்ணும் பழக்கம் நகரங்களில் வெகுவாக குறைந்து வருகிறதே...

?உண்மைதான்! கணவன் - மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் வீடுகளில், ரொட்டி, கேழ்வரகு கஞ்சி, கெலாக்ஸ், அவல், நூடுல்ஸ், ஓட்ஸ் கஞ்சி சாப்பிடும் கலாசாரம் பரவி வருகிறது... இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு ஐந்தாயிரம் கோடிக்கு ரொட்டி விற்பனையாகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!



** சு.விஸ்வநாதன், பொள்ளாச்சி: மனதில் அச்சமில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர் யார், யார்?

?பொய் சொல்லாதவர்; கோர்ட் படி மிதிக்காதவர்; வம்பு, தும்புகளுக்குப் போகாதவர்; கடன் வாங்காதவர்; ஒழுங்காக வருமானவரி கட்டுபவர்களுக்கு அச்சமென்பது இல்லை! 



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us