PUBLISHED ON : ஆக 08, 2010

* எஸ்.குமரேசன், மணவாள நல்லூர்: கல்யாணத்திற்கு ஜாதகம் பார்ப்பது சரியா?
*ஜாதகம் பார்த்து நடந்த திருமணங்களும், 'பெயிலியர்' ஆகின்றனவே! ஜாதகம்,
ஜோசியம் இதிலெல்லாம் எனக்கு ஒப்புதல் கிடையாது. பெரிய இடத்து பையன் ஒருவரின் ஜாதகத்தை வாங்கி, அதற்கு ஏற்றபடி பெண்ணின் ஜாதகத்தை மாற்றி, செய்து வைத்த திருமணங்கள் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த தம்பதி>யர், சகல சுக போகங்களுடன், சவுகரியமாக பேரன், பேத்திகளுடன் வாழ்கின்றனர். மனப் பொருத்தம் மட்டும் பாருங்கள்,போதும்!
* **
* எஸ்.சி.சந்தோஷ்குமார், உடுமலைப்பேட்டை: கேரள மாநிலம், கர்நாடக மாநிலம், பீகார் மாநிலம் என்று கூறுகிறோம். ஆனால், தமிழ்நாட்டை, தமிழ் மாநிலம் என்று கூறாமல், 'நாடு' என்று கூறுகின்றனரே... இது என்ன தனி நாடா?
*திராவிட இயக்கத்தினர் செய்த வேலை இது. 1968ல் அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது, 'தமிழ்நாடு' என பெயர் மாற்றி விட்டாராம். அதுவரை, 'மெட்ராஸ் ஸ்டேட்' என ஆங்கிலத்திலும், 'மதராஸ் ராஜதானி' என இந்தியிலும் அழைக்கப்பட்டு வந்ததாம்!
***
* கே.ஜெயச்சந்திரன், திருப்பூர்: நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே படிக்கிறேன்... என்னுடைய ஏட்டு படிப்பை தொடர்வதா அல்லது தொழில் கற்றுக் கொள்ளலாமா?
*வேலை செய்து கொண்டே படிப்பதாக கூறுவதால், உங்கள் குடும்ப சூழல் புரிகிறது. ஏட்டு படிப்பில் ஒரு, 'டிகிரி' வாங்கினால், தற்போதைய வேலையை விட மரியாதை(!)யான வேலையை தேடி அலைய வேண்டியதுதான் மிச்சமாக இருக்கும். நீங்கள் இப்போது பார்க்கும் நிறுவனத்திலேயே தொழில் ஏதும் கற்றுக் கொள்ள முடிந்தால், 'வெல்அண்ட் குட்!' இல்லாவிட்டாலும் ஏதாவது தொழில் கற்று, சுய காலில் நிற்க முயற்சிப்பது, 'பெஸ்ட்!'
***
* ஆர்.லட்சுமி, கோவை: அழகான, அறிவில்லாத பெண், அறிவான, அழகு குறைவான பெண் - உங்களை கவர்பவர் யார்?
?ஏன்... இரண்டும் சேர்ந்து இருக்காது என நம்புகிறீர்களா? அப்படியானால் இரண்டாவது ரகத்துக்கே என் ஓட்டு!
***
* பி.சி.சுவாமிநாதன், மடத்துக்குளம்: தங்கி இருக்கும் வீட்டின் நிலை தெரியாமல், விருந்தினர்கள் நாள் கணக்கில், 'டேரா' அடித்து விடுகின்றனரே...
* இந்த விஷயத்தில் கவுரவம் பார்க்காமல், உள்ள நிலவரத்தை எடுத்துச் சொல்லி விடுவதுதான் புத்திசாலித்தனம்! கடன் ஏற்பட்டால் இவர்கள் கண்டு கொள்ளவா போகின்றனர்!
***
* எம்.சிவக்குமார், கிணத்துக்கடவு: சிறு பிரச்னை வந்தாலும், 'தற்கொலை' எண்ணம் மேலோங்குகிறதே எனக்கு!
* உளவியலாளர்களும், அவர்களது நூல்களும் கூறுவது என்ன தெரியுமா? தற்கொலை எண்ணம் கொண்டவர்கள், தாங்கள் உயிர் மேல் மிகுந்த ஆசை கொண்டவர்கள். ஒரு நாளும் இவர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள். மாறாக, தற்கொலை என்பது அந்த ஒரு நிமிஷத்து உணர்ச்சியின் வேகத்தில் நிகழ்வது என்கின்றனர். கவலைப்படாதீர்கள்... 'அந்த' செயலுக்கு துணிய மாட்டீர்கள்!
***
*என்.ராஜசேகரன், ஊட்டி: சிரித்து பேசுபவர்கள் எல்லாரும் கழுத்தறுப்பவர்கள் என்பது உண்மையா?
* அரசியல்வாதிகளின் சிரிப்பை சிரிப்பவர்களை மட்டும், 'கானா' அறுப்பு கோஷ்டியில் சேர்த்துக் கொள்ளலாம்!
***
