தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மார் 17, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வீ.சேர்மத்துரை, சென்னை: சென்னையில் நடந்து முடிந்த புத்தக கண்காட்சி பற்றி...

புத்தக கண்காட்சி நடந்த அனைத்து நாட்களும், தினமும் சென்றாலும் கூட, அனைத்து ஸ்டால்களையும்; புத்தகங்களையும் பார்த்து விட முடியாத அளவில், உபயோகமான புத்தகங்கள்... திரும்பிச் செல்லும் ஒவ்வொருவர் கையும், புத்தகப் பொதியைத் தூக்கிச் சென்றது, மகிழ்ச்சியான காட்சியாக இருந்தது. கோடை விடுமுறை நாட்களில், சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும், புத்தகத் திருவிழா நடைபெற வேண்டும்!

***

* ஜி.சுவாமிதாஸ், புதுச்சேரி: எப்படிப்பட்ட பெண்களை, ஆண்களுக்கு பிடிக்கிறது?

தம் பேச்சுக்கு எதிர் பேச்சு, மறு பேச்சு பேசாத, தம் செயல் எதற்கும் தடை போடாத, அடக்க ஒடுக்கமாக இருக்கும் பெண்களைத் தான் பிடிக்கிறது! ஆனால், இக்காலப் பெண்கள், கட்டுப் பெட்டிகள் அல்லவே... குறைந்த பட்சம் பிளஸ் 2 வரை படித்து விடுகின்றனர்; உலக அறிவும் இருக்கிறது... சும்மா இருப்பார்களா?

***

* வி.கார்த்திகை செல்வி, வத்திப்பட்டி: 'விசிடி'ஐ ஒழிக்க, ஒரு வழி கூறுங்களேன்...

திருட்டு 'விசிடி'ஐ ஒழிக்கவே முடியாது! படம் வெளியாகும் போதே, 'விசிடி'ஐயும் ரிலீஸ் செய்தால், தயாரிப்பாளர் கொஞ்சம் அதிகம் காசு பார்க்கலாம். இதை ஒழிக்க, அநாவசிய செலவு செய்து, போலீசில் ஒரு துறையும் இருப்பது கிரிமினல் வேஸ்ட்!

***

**ஆர்.பாலாஜி, திருவள்ளூர்: கணவன் - மனைவி சண்டை, குழந்தைகளுக்குத் தெரிவது நல்லதா, கெட்டதா?

ரொம்பக் கெட்டது... சின்னஞ் சிறுசுகளின் மனநிலை முழுவதும், பாதிப்பு ஏற்பட்டு, அவர்களின் படிப்பு முதல், மற்ற வளர்ச்சிகள் அனைத்துமே தடைப்படும்... அம்பலத்துக்கு வர வேண்டாம் தம்பதியரின் சங்கதி!

***

*ஜெ.வீரபத்திரன், கண்டனூர் : முக்கியமான அரசு துறைகளை எல்லாம் தனியார் மயமாக்கினால், அரசு எதற்கு?

இந்தக் கேள்விக்கு பதில் சொல்லிச் சொல்லி அலுத்து விட்டது. அரசு என்பது, வியாபாரம் செய்யவும், தொழில் செய்யவும் அல்ல; வரி வசூல் செய்து, நல்லாட்சி தர மட்டுமே! ராணுவமும், வெளியுறவும் நிச்சயம் தனியார் மயமாகாது; கவலைப்படாதீர்கள்!

***

**ஜே.தங்கமணி, மதுரை: வாழ்க்கைக்கு, வரையறுத்த நெறி முறைகள் தேவையா?

கண்டிப்பாக; அவை இல்லாவிட்டால் மனிதனுக்கும், மாட்டிற்கும் வித்தியாசம் ஏது?

***

*மு.விஷ்ணுவர்தன், ராமநாதபுரம் : 'அந்த' மாதிரி சர்வே ஒன்று எடுத்து விடுங்களேன்...

ஓ... லண்டனில் இருந்து வெளிவரும், 'டாப் கியர்' என்ற வாகனங்களைப் பற்றிய இதழ் வெளியிட்டுள்ள சர்வே இது... காதலியையோ, மனைவியையோ, காரினுள் இருந்தபடியே, ஒரு மனிதன் வாழ்நாளில் சராசரியாக, 2 மணி நேரம் 14 நிமிடம் முத்தம் கொடுக்கிறானாம்! அதே போல, காரினுள்ளேயே அவனோ, அவளோ வாழ்நாளில், ஆறு முறை 'செக்சில்' ஈடுபடு

கின்றனராம்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us