sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்

/

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : மே 05, 2013

Google News

PUBLISHED ON : மே 05, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எல்.அபிராமி, ஓசூர் : இயல்பாகவே நகைச்சுவை குணம் பெண்களிடம் அதிகமா, ஆண்களிடம் அதிகமா?

பெண்களைக் கண்டதும், அவர்களுடன் பேசும் போதும், நகைச்சுவை பொங்கிவிடும் ஆண்களிடம்!

***

**சு.மணியரசு, கடலூர் : ஒரு முறைக்கு, 100 முறை சிந்தித்து செய்த செயலும் கூட தோல்வி அடைந்தால்...

நூறு முறை செய்த சிந்தனையிலும், ஓட்டைகள் கண்ணில் படவில்லை என்பதே பொருள்.

***

*என்.சரவணன், கோவை: எந்தக் கட்சி, ஆட்சிக்கு வந்தால், ஏறிய விலைவாசி குறைய வழியுண்டு?

இனி, எந்தக் கட்சியின் ஆட்சி வந்தாலும், விலைவாசி குறையப் போவதில்லை... விலைவாசிக்கு ஏற்ப, வருமானத்தைப் பெருக்க முயலுங்கள் அல்லது பெல்ட்டை இறுக்கி, வருமானத்துக்குள் செலவை சுருக்குங்கள்!

***

** வி.ராகவேந்திரா, நத்தம் : கூட்டணியிலிருந்து தி.மு.க., விலகியதற்குச் சொல்லப்படும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கவையா?

இல்லை என்பது, பாமரனுக்கும் தெரியும்... அரசியல் சூதை வேடிக்கை பார்க்கத்தான் முடியும்... தன் ரவுத்திரத்தை வெளிக்காட்ட இவன் ஓட்டுச் சாவடிப் பக்கம் போவதில்லையே!

***

*சி.பிரான்சிஸ் தேவா, ராஜபாளையம் : ஆண், பெண் இருவரும் வேலை பார்த்து, இருவரும் டென்ஷன் ஆக சந்தர்ப்பங்கள் நிறைய இருக்கும் இக்காலத்தில், ஆணை விட, பெண்ணுக்குத் தான் அதிகம் பொறுமை இருக்கும் என்று, இன்னமும் உறுதியாக கூற இயலுமா?

பெண்களுடைய மரபணுவில் கலந்தது பொறுமை எனும் அம்சம். அவர்களால், எந்த சந்தர்ப்பத்திலும் நிதானமாக செயல்பட முடியும். வேலையிடங்களில் டென்ஷன் இருந்தாலும், எதனால் டென்ஷன் என்பதை ஆராய்ந்து, அதை நிவர்த்தி செய்யும் பொறுமை, அவர்களிடம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

***

*ஞா.கலையரசி, தாம்பரம்: திருமணம் செய்து கொள்ள போகிறேன். கணவரிடம், கண்டிப்பாக இருப்பது நல்லதா, அடங்கி நடப்பது நல்லதா?

இரண்டாவதை தேர்வு செய்ய வேண்டாம். முதலாவது ஒத்து வராது. சமத்துவம் பாராட்டி, அன்பு செலுத்தி குடும்பம் நடத்துங்கள். தெளிந்த நீரோடை ஆகும் இல்வாழ்க்கை!

***

**எஸ்.முனீஸ்வரன், அருப்புக்கோட்டை : எதிர்காலத்தில், சவுகரியமாக, சந்தோஷமாக வாழ போகிறவர்கள் யார்?

அடுத்தவன், நம்மை மதிக்க வேண்டும்; உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காக, ஆடம்பர செலவு செய்யாமல், எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எல்லாரும், சந்தோஷமாக, சவுகரியமாக இருப்பர். செலவை குறைத்துக் கொள்ள முடியாமல், கடன் வாங்கி செலவு செய்பவர்களின் வாழ்க்கை தற்கொலையில்தான் முடியும்!

***






      Dinamalar
      Follow us