sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்

/

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : ஜூன் 16, 2013

Google News

PUBLISHED ON : ஜூன் 16, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*பி.வாசுதேவன், திருநகர்: வருமானவரி கட்டாமல், 'டிமிக்கி' கொடுப்பவர்களை சுட்டுப் பொசுக்கித் தள்ளினால் என்ன?

தள்ளலாம் தான்! அதற்கு முன், நம்மிடமுள்ள கண்மூடித்தனமான, தாங்க முடியாத, வருமான வரியை குறைக்க வேண்டும்! (இது பெரிய 'சப்ஜெக்ட்'. தனிக் கட்டுரையாக்கித்தான், 'டிஸ்கஸ்' செய்ய முடியும்!)

***

** ஆர்.சங்கரன், கோவை: திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு கட்சியே தோன்றாமல் போயிருந்தால் நாம் எதை எதையோ இழந்திருப்போம் அல்லவா?

தவறு! மேடைப் பேச்சு தமாஷ்களை மட்டுமே இழந்திருப்போம்! வேறு எதையும் இழந்திருக்க மாட்டோம்!

***

*எஸ்.சுமதி, விருதுநகர்: பெண்கள் வேலைக்குப் போவதால் நன்மை அதிகமா, தீமை அதிகமா?

தொண்ணூறு சதவீதம் நன்மைதான்! பெண்ணுக்கு, தன்னம்பிக்கை கிடைக்கிறது. அடக்குமுறைகளுக்கு, தலை பணிந்து நடக்கும் நிலை மாறுகிறது! குடும்பப் பொருளாதாரம் உயருகிறது... இன்னும், எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம்!

***

**எம்.ராஜேஷ், சென்னை: அக்கா மகனுக்கு பெண் கொடுக்க மறுக்கும் தம்பி... தம்பி மகனுக்கு தான், பெண் கொடுக்க வேண்டும் எனத் துடிக்கும் அக்கா... இதில் யார் உசத்தி?

தம்பிதான் விவரமான ஆளு! 'நெருங்கிய சொந்தத்தில் திருமண உறவு கொள்வது, எதிர்கால சந்ததியினரின் நலனுக்கு உகந்தது அல்ல...' என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பை, அவர் ஆதரிக்கிறார் போலும்... தம்பியே நம்பர் ஒன்!

***

* ஜா.வர்கீஸ், கடலூர்: பணத்தைக் கொண்டு வாங்க முடியாதது என, இவ்வுலகில் ஏதும் உண்டா?

உண்டே! மன அமைதியை, பணம் கொடுத்து வாங்க முடியுமா? நமக்கு எல்லாம் இருக்கும் மன அமைதி, இன்று எந்த பணக்காரனுக்கு இருக்கிறது, சொல்லுங்களேன்!

***

* டி.குருபரன், பொள்ளாச்சி: எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லையே...!

ஆடம்பரங்களும், அனாவசியங்களும் இருக்கும் வரை, போதவே போதாதுதான்!

***

*எஸ்.பிரபா, தேனி: என் மனதில் சந்தோஷமே இல்லையே...

எதிர்பார்ப்பே இல்லாமல், உதவி செய்து பாருங்கள்.... உள்ளம் முழுதும் சந்தோஷத்தில் நீச்சலடிக்கும்!

***

*எஸ்.பி.தாமஸ், கூடலூர்: பெண்களை மட்டும் தானே பேய் பிடித்துக் கொள்கிறது...

ஆடும் போது, சிலுப்பிக் கொள்ள பெண்களிடம் மட்டும் தானே, முடி இருக்கிறது...

***






      Dinamalar
      Follow us