தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மார் 09, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 09, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டி.வினோத், விழுப்புரம்: வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் உண்டாக வழி என்ன?

'நம்மால் முடிந்தாலும், முடியாவிட்டாலும், 'நம்மால் முடியும்' என்பதை, எப்போதும் உள்மனதில் வளர்க்க வேண்டும். நார்மன் பிராய்டு போன்ற அறிஞர்களின் புத்தகங்களை, சோர்வு ஏற்படும் போதெல்லாம் படிக்க வேண்டும். அவை ஊக்கத்தைத் தரும்; மனதில் ஊக்கம் இருக்கும்போது, உற்சாகம் தானே வரும்; முயன்று பாருங்கள்.

க.பீமன், ராமநாதபுரம்: நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன்; பின்னால் சுற்றியபோது, 'மூஞ்சியப் பார்' என்று, திட்டி விட்டாள். பிறகும் என்னைப் பார்த்து சிரிக்கிறாளே...

கிளியர் கட்டாக இது, 'பச்சைக் கொடி' தான். ஆரம்பத்தில், 'பிகு' செய்யாமல், 'எஸ்' சொன்னால், ஆண்களிடத்தில் தம் மதிப்பு இறங்கி விடும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான், இந்த, 'மூஞ்சியப் பாரு' எல்லாம், என்கிறார் அனுபவப்பட்ட பெண் உதவி ஆசிரியை ஒருவர்!

எஸ்.விசாலாட்சி, சென்னை: ஒரு பெண்ணின் அழகை, ஆண் ரசிக்கிறான்; அதுபோல், ஆண்களை பெண்கள் ரசிப்பது உண்டா?

என்னங்க அதிசயக் கேள்வி கேட்குறீங்க... அவர்களும் மானிடர்கள் தானே! அவர்களுக்கும் ரசிக்கும் உணர்வுகள் இருக்கத்தானே செய்யும். வண்ணத்தை, வாசனையை, இயற்கையை, மேகத்தை, நிலவை ரசிப்பது போல, ஆண்களின் கம்பீரத்தையும், புத்திசாலித்தனத்தையும், அழகையும் ரசிக்கத்தான் செய்வர்; அது ஒரு இயற்கை உணர்வு. அப்படி ரசிக்கவில்லை என்றால், ஏதோ கோளாறு உள்ளது என்று அர்த்தம். ஆண்களைப் பார்க்கவே மாட்டேன், அவர்களை எடை போட மாட்டேன், ரசிக்க மாட்டேன் என்றால், அப்பெண் ஒரு, 'ஹிப்போகிராட்' என கொள்ள வேண்டியது தான்.

எஸ்.கோவர்த்தனன், காஞ்சிபுரம்: எல்லா விஷயத்திலும் சந்தேகப்படும் பெண்மணிகளை திருத்துவது எப்படி?

சிரமம் தான்; இனி வரும் தலைமுறையினரை இந்த வியாதியில் இருந்து காப்பாற்ற, கல்விதான் சிறந்த மருந்து!

கே.கீதா, மதுரை: பொது இடங்களில் கை கோர்த்துக் கொண்டும், பைக்கில் போகும் போது வயிற்றைக் கட்டிக் கொண்டும் சென்று, வாலிப நெஞ்சங்களை சலனப்பட வைக்கும் ஜோடிகள் பற்றி...

இவையெல்லாம் மிகச் சாதாரணமான, இயற்கையான செயல். இவை எப்படி சலனப்பட வைக்கிறது என்பதை, என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. இதனால், சலனப்படும், 'இளம் நெஞ்சங்கள்; மனதை திடப்படுத்தும் நூல்களை படித்தும், உபன்யாசங்களையும் கேட்கட்டும்!

எம்.அகிலா, கோவை: வாரமலர் இதழுக்கு அனுப்பப்படும் கேள்விகள் அல்லது கடிதங்கள், சிறுகதைகள், தமாசுகள் வெளியாவதற்கு ஏதேனும் காலக்கெடு உள்ளதா? அனுப்பிய மறு வாரம் அவை இடம்பெறவில்லை என்றால், அது இனி வரும் வாரங்களில் வெளியாகாது எனக் கொள்ள வேண்டுமா?

பலரும் கொண்டுள்ள சந்தேகம் இது. புதன், வியாழக்கிழமைகளில் வந்து சேரும் கேள்வி கார்டில், 'வரும் ஞாயிறு, இதற்கான பதிலை எதிர்பார்ப்பேன்... உங்கள் கையில்தான் என் உயிர் உள்ளது...' என்றோ, 'வரும் ஞாயிறு வெளியாகாவிட்டால், உமது பத்திரிகை வாங்குவதையே நிறுத்தி விடுவேன்...' என்றோ எழுதுகின்றனர்.

கடிதங்கள், சிறுகதைகள், துணுக்குகள், தமாசுகள் தேர்வாகிய பின், வெளியாவதற்கு ஆறு மாதங்கள் கூட ஆகலாம். ஆனால், 'டாபிகல்' கடிதங்கள், கேள்வி - பதில்கள், தமாசுகள், சிறுகதைகள் இரண்டு வாரத்தில் வெளியாகும் வாய்ப்புகளும் உள்ளன.

இதே நடைமுறை தான் பெரும்பாலான பத்திரிகைகளிலும். எனவே, சனிக்கிழமை போஸ்ட் செய்து, ஞாயிற்றுக் கிழமை புத்தகத்தில் வெளிவரும் என, எதிர்பார்ப்பதை வாசகர்கள் தவிர்க்க வேண்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us