தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : ஜூன் 22, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 22, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

க.விக்னேஷ், துடியலூர்: காதலித்து, திருமணத்திற்கு ஏற்பாடு செய்து, மணமேடையில் பெண் காத்திருக்க, கம்பி நீட்டும் மாப்பிள்ளைகளை தேடிப் பிடித்து, போலீஸ் துணையுடன் அவர்களையே கைப்பிடிக்கும் பெண்களைப் பற்றி...

துணிச்சல் மிக்க கெட்டிக்காரப் பெண்கள். ஊருக்கு நாலு பெண்கள் இப்படி இருந்தால் போதும், காதலித்து, காரியம் முடிந்ததும் கம்பி நீட்டும் ஆண், 'சிங்கங்களை' கூண்டில் அடைத்து, வேடிக்கை காட்டலாம்!

பி.ரத்தனசபாபதி, வில்லாபுரம்: மன நிம்மதியோடு வாழ, ஒரு வழி சொல்லுங்களேன்?

அடுத்தவரின் நல்வாழ்வு கண்டு பொறாமைப்படும் குணத்தை ஒழியுங்கள்; தானே தேடி வரும் மன நிம்மதி!

மு.ஜான்சிராணி, கள்ளக்குறிச்சி: உங்களுக்கு ஒரு காதல் கடிதம் எழுதி வைத்துள்ளேன். அதை போஸ்ட் பண்ணலாமா, வேண்டாமா என, இரு மனதுடன் இருக்கிறேன். என்ன செய்வதென்று நீங்கள் சொல்லுங்கள்?

அனுப்பி வையுங்களேன்... என் எழுத்தை காதலித்து எழுதப்பட்ட கடிதம் தானே அது!

ஜி.ஜெயம், நங்கநல்லூர்: நிரந்தர வேலையில் அமர்ந்த பின், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவில், பெண்கள் இருப்பதில் தவறில்லையே...

தவறா? அதுதான் தாரக மந்திரமாக, உயிர் மூச்சாக இருக்க வேண்டும். வெளிநாடுகள் போல், 'பினான்ஷியல் இண்டிபெண்டன்ஸ்' நம்மூர் பெண்களுக்கு கிடைத்தால் மட்டுமே, ஆண்களுக்கு சமமான நிலையை அடைய முடியும்.

எஸ்.சாந்தா, திருவான்மியூர்: சில ஆண் நண்பர்கள், சிறிது நெருங்கிப் பழகியவுடனே காதல் கடிதம் நீட்டி விடுகின்றனரே... இந்த, 'மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்'கை எப்படி தவிர்ப்பது? 'இது, காதல் அல்ல; வெறும் நட்புதான்...' என்று, அவர்கள் மனம் புண்படாதபடி எப்படி புரிய வைப்பது?

நம்முடையது, 'ப்ரீ சொசைட்டி' இல்லை; பூட்டிப் பூட்டி வைப்பதாலேயே, ஒரு பொருளின் மீது, 'அட்ராக் ஷன்' அதிகரிக்கிறது. எனவே, ஒரு பெண்ணிடம் ஏற்படும் நட்பை, காதல் என்றே, ஆண்களை எண்ண வைக்கிறது. நம் ஆண்கள் பெரும்பான்மையோருக்கு, பெண்களுடன் பழகும் பக்குவம், இன்னும் வரவில்லை. எனவே, பழக ஆரம்பிக்கும் போதே, பக்குவமாக, உங்களின் செயல் மூலம், இது வெறும் நட்பு என்பதை, புரிய வைத்து விடுவது நலம்!

எஸ்.யோகலட்சுமி, மயிலாப்பூர்: பயிற்சி என்பதை பயிற்ச்சி என எழுதும், 12ம் வகுப்பு மாணவனின், இத்தகைய மொழி அறிவின் குறைவிற்கு, என்ன காரணம்?

இது பரவாயில்லை; பயிர்சி என்று எழுதும், பட்ட படிப்பு படித்த இளைஞர்களும் இருக்கின்றனரே... (ஆசிரியர்கள் கோபிக்கக் கூடாது.) இந்த தவறுகள் களையப்படாமல் இருப்பதற்கு, முக்கால் காரணம் ஆசிரியர் என்றே சொல்வேன். மனது வைத்தால், 'ண, ன, ழ, ள, ற, ர' இது போன்ற குழப்ப பிரச்னைகளை, சுலபமான முறையில் விளக்கி, தீர்த்து வைக்க முடியும்!

வி.கங்காதரன், கடலூர்: ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, நம்மை பேச விடாமல், சுய புராணம் பாடியே அறுப்பவர்களைப் பற்றி?

இப்படிப் பட்ட ஆசாமிகளை என்ன சொல்லியும் திருத்த முடியாது. சிறிது நேரம், 'ஹி...ஹி...' என, அசடு வழிந்து, பின் நைசாக, 'கட்' செய்து விடுவதே மேல்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us