தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : ஜூலை 20, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 20, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.சித்ரா, மயிலாப்பூர்: நான் பி.ஏ., முதலாமாண்டு மாணவி; எவ்வளவோ பேருக்கு பேனா நண்பர்களை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளீர்கள். உங்களது பேனா நட்பு எனக்கு கிடைக்குமா?

உங்கள் கடிதம் முழுவதும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது. உ.ஆ., ஒருவர் உதவியுடன் தான் படித்து, கடிதத்தை புரிந்து கொண்டேன். முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எழுதினால், உ.ஆ.,தான் உங்களுக்கு, 'பென் பிரண்டு'ஆவார்!

க.லலிதா, மேலூர்: நகர்புற பெண்களைப் போல், கிராமப்புற பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனரா?

நீங்கள் கேள்வியை உல்டா செய்து கேட்டிருக்க வேண்டும்... நகர்புற பெண்களை விட, கிராமத்தில் இருந்து வரும் பெண்கள் தான், முன்னேற்றத்தில் முதல்!

எம்.துளசிதாஸ், திண்டுக்கல்: நாகரிக வளர்ச்சி, பெண்களை வாழ வைக்கிறதா அல்லது வீழ வைக்கிறதா? உலகம் சுற்றி வந்த அந்துமணியின் கணிப்பு என்ன?

பெண்கள் முன்னேற்றத்தை சகித்துக் கொள்ள முடியாதவர்கள், வீழ வைக்கிறது என்றே சொல்வர். நாகரிக வளர்ச்சியுடன் பெண்கள் ஒத்துப் போவதால், சமுதாயம் குறித்த அவர்களின் கண்ணோட்டத்தில், பெரும் முன்னேற்ற மாறுதல் தெரிகிறது. பெண்களின் இந்த வரவேற்கத்தக்க மாற்றம், விரைவில் ஒரு சமூகப் புரட்சி ஏற்பட அஸ்திவாரமாக அமையும் என்பது நன்கு புலப்படுகிறது.

எல்.ஆர்.யோகலட்சுமி, திருவல்லிக்கேணி: எனக்கு திருமணமாகி, ஐந்து மாதங்கள் முடிந்து விட்டன. கூட்டுக் குடும்பம்; பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து வைத்து விட்டனர். என் மாமியார் திட்டும் போது, என்னுடைய படிப்பையும், பெற்றோரையும் சேர்த்து திட்டுகிறார். என் கணவரோ ஒன்றும் பேச வேண்டாம் என்று கூறுகிறார். மனது நிம்மதியில்லாமல் இருக்கிறது. இதற்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள்!

உங்கள் கணவர் சொல்வது சரி தான்; அவர் சொல்படி சில காலம் நடந்து வாருங்கள். அதே நேரத்தில், மாமியாரின் அன்பை பெற்று, அவரை உங்கள் கைக்குள் போட்டுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்படியும் கொட்டிக் கொண்டே இருந்தால், சுமுகமாக பிரிந்து, தனிக் குடித்தனம் சென்று விடுங்கள். பிரச்னை தீர சுலபமான வழி இதுதான்!

பி.விஸ்வநாதன், பெருமாள்பட்டு: முயற்சி திருவினையாக்கும் என்று கூறி, 'வெறும் தலையால் முட்டி பெரிய பாறாங்கல்லை உடைத்திடுவேன்' என்பது முட்டாள் தனம் தான். ஆனால், முயற்சியைப் பற்றி வரையறை கொடுக்காத அந்த பழமொழி பற்றி, உம் சிந்தனை?

கஜினி முகம்மது என்ன வரையறை, ஏற்படுத்திக் கொண்டார்? எனக்கு தெரிந்தவரை, அவர் ஏற்படுத்திக் கொண்ட வரையறை, 'வெற்றி' மட்டும் தான்!

எஸ்.கோபிநாத், பசுமலை: ப்ரீயா பேசினால் ஓட்டவாயன்; அளந்து பேசினால உம்முணா மூஞ்சி என்கின்றனரே...

பேசாமலே இருந்தால், 'அமுக்கன்' என்பர். நம்ம ஜனங்கள் சூட்டும் நாமகரணங்களுக்கு அளவேது சாமி! நீங்கள், நீங்களாகவே இருக்க முயற்சி செய்யுங்கள். அவன் சொன்னான், இவன் சொன்னான் என்பதற்காக, ஒவ்வொரு அரை வினாடியிலும், உங்களை மாற்றிக் கொள்ள முடியுமா என்ன?

பொ.விருமாண்டி, திருவேடகம்: காதல் வெற்றி பெறுவதில், ஒரு சுகமுமில்லை என, ஒரு கவிஞர் கூறியிருக்கிறாரே...

போயும் போயும் இந்தக் கேள்வியை என்னிடமா கேட்க வேண்டும். காதல், கீதலில் எல்லாம் அனுபவமில்லை சாமி... (ஆமா... உன் மூஞ்சிய எவ காதலிப்பா என, நீங்கள் அங்கிருந்தே கூறுவது கேட்கிறது எனக்கு!)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us