sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜூன் 28, 2015

Google News

PUBLISHED ON : ஜூன் 28, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.கலைவாணி, ஓடந்துரை: வெளிநாட்டு சேதி ஏதேனும் சொல்லுங்களேன்...

இது, பிரான்ஸ் நாட்டு சேதி... அங்கெல்லாம், இளம் பெண்களும், ஆண்களும் சாலையில் கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்து, சல்லாபம் செய்வது சகஜம்; இதை, அங்குள்ளோர் கண்டு கொள்வதில்லை. ஆனால், இப்போது, விழித்துக் கொண்டு, 'கலாசாரம் கெடுகிறது...' எனக் கூறி, சாலையில் சல்லாபம் செய்வதை தடை செய்வதுடன், மீறுவோரை கைது செய்கின்றனர்!

பொ.மாரிமுத்து, நெய்வேலி: யார், யார் நிம்மதியாக வாழ்கின்றனர்?

அடுத்தவர் செலவில் காலம் தள்ளுபவர்; மந்திரிக்கு மருமகனாய், உறவினராய் ஆனவர்!

பி.சாதிக் பாட்ஷா, பெரியகோட்டை: படித்தவர்கள் பலரும் வேலையின்றி இருக்கின்றனரே...

இவ்வளவு சம்பளத்தில், இந்த ஊரில், இந்த வேலைதான் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனரே... கிடைக்கிற வேலையை செய்ய வேண்டும்; அதில், கேவலம் ஒன்றுமில்லை. படித்து விட்டோம் என்பதற்காக, எந்த வேலையும் பார்க்காது சுற்றித் திரிவது தான் கேவலம்!

எஸ்.லில்லி மேரி, கீழ்பெரும்பாக்கம்: ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் எது பெஸ்ட்?

அவசர சிகிச்சைகளுக்கு ஆங்கில மருத்துவம் கை கொடுக்கும்; மற்றபடி சித்த வைத்தியம் தான், 'பெஸ்ட்' என்று, ஆங்கில மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த பலரும், சித்த வைத்தியத்தை நாடி வருவதைப் பார்க்க முடிகிறது!

பி.சரண்யா, கம்பம்: பெண்களை மட்டும் தானே பேய் பிடித்துக் கொள்கிறது...

ஆடும்போது சிலுப்பிக் கொள்ள அவர்களிடம் மட்டும் தானே முடி இருக்கிறது!

எம்.பாலாஜி, ராஜபாளையம்: நிம்மதியான எதிர்கால வாழ்க்கைக்கு இப்போதிருந்தே என்ன செய்ய வேண்டும்?

உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டும்; சம்பாத்தி யத்தில் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்; மகன் மற்றும் மகள் காப்பாற்றுவர் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளக் கூடாது. எல்லா வற்றிற்கும் மேலாக, கண்டிப் பாக பயனுள்ள ஒரு பொழுது போக்கை கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் பணி ஓய்வுக்குப் பின், வாழ்க்கை கசக்காது!

வி.பிரவீணா, ஈக்காட்டுதாங்கல்: என் குறிக்கோளை அடைய, என் பெற்றோர் உட்பட, எவருமே உதவ முன் வருவதல்லை. நான் என்ன செய்ய?

உங்க மனோபலம் தான் உங்கள் குறிக்கோளை அடைய உதவக் கூடியது. சமூகத்தில் சிறந்த மனிதர்களைப் பாருங்கள்... வெளி உதவி ஏதும் இன்றி தம் மன வலிமையினால் குறிக்கோளை அடைந்தவர்களாக இருப்பர்.

அவர் உதவுவார்,  இவர் உதவுவார் என்ற மனப் பான்மையை இன்றோடு விட்டுவிடுங்கள்!

டி.எஸ்.செல்வராஜ், உடையூர்: தன்னையே சுற்றி வரும் ஒரு ஆடவனை, விரும்புகிறேன் என்றோ, விரும்பவில்லை என்றோ சொல்லாமல், அலைய வைக்கும் பெண்களை என்ன செய்யலாம்?

'உத்தமி' என்று சொல்லி கும்பிடலாம்! திருமண நோக்கம் உள்ளவனாக இருந்தால், சுற்றி சுற்றி நேரத்தை வீணாக்காமல் பெண்ணின் பெற்றோரை அணுக வேண்டியது தானே!






      Dinamalar
      Follow us