sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜூன் 12, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 12, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.முத்துக்குமார், சிறுகடம்பூர்: பெண்கள் வேலைக்குப் போவதால் நன்மைகள் அதிகமா, தீமைகள் அதிகமா?

தொண்ணூறு சதவீதம் நன்மைதான்; பெண்ணுக்கு தன்னம்பிக்கை கிடைக்கிறது, அடக்குமுறைகளுக்கு தலை பணிந்து நடக்கும் நிலை மாறுகிறது. குடும்பப் பொருளாதாரம் உயருகிறது. இன்னும் எத்தனையோ... அடுக்கிக் கொண்டே போகலாம்!

ந.மஞ்சுளாதேவி, கண்டமனூர்: கணவனால் மனத் துன்பங்களுக்கு ஆளாகும் பெண்கள், அதை சகிப்பது, எதிர்ப்பது, எது சரி?

இரண்டுமே, 'எக்ஸ்ட்ரீம்' லெவலுக்கு போகக் கூடாது. மூங்கிலை வளைக்கலாம் என்பதற்காக, அளவுக்கதிகமாக வளைத்தால் என்னவாகும்? சகிப்பதும், எதிர்ப்பதும் சரியான வீதத்தில் இருந்தால், மனத் துன்பம் வெகுவாக குறையும்!

பொ.ஜெயவேலன், மயிலாப்பூர்: நெருங்கிய உறவினர் ஒருவருக்கு நெருக்கடியான நேரத்தில் உதவி செய்தேன். இப்போது, அவர் என்னைப் பார்த்தும் பார்க்காதது போல் செல்கிறாரே...

இதுதான் உலக நடப்பு. பிரதிபலன் எதிர்பாராமல் செய்வது தான் உதவி; எதிர்பார்ப்பு இருந்தால், ஏமாற்றம் தான் மிஞ்சும்!

எஸ்.ரகுவரன், பெரியகுளம்: இந்தக் காலத்தில், நல்ல குணங்களுக்காக மட்டும், ஏழைப் பையனை திருமணம் செய்து கொள்ள முடியுமா?

முடியாது; வாழ்க்கை நடத்த, 'டப்பு' ரொம்ப அவசியம். பையன் ஏழையாக இருக்கலாம்; ஆனால், சம்பாத்தியம் கண்டிப்பாக இருக்கணும்!

ஆர்.வசந்தகுமார், திண்டிவனம்: உலகில் சிறந்ததாக கருதப்படுவது கேள்வி கேட்பதா அல்லது பதில் சொல்வதா?

கேள்வி கேட்பது... 'கேள்வி கேளுங்கள்' என, மக்களைத் தூண்டி புரட்சிக்கு வித்திட்டார், தத்துவஞானி அரிஸ்டாட்டில். இங்கே நம்மூர் வாத்தியார்களில் பலர், மாணவர்கள் வாயைத் திறந்தாலே பிரம்பை தூக்கி விடுகின்றனரே... அன்பான ஆசிரியர்களே... மாணவர்களை கேள்வி கேட்கத் தூண்டி விட்டுத்தான் பாருங்களேன்!

பி.மோகன், சின்னமனூர்: 'டிவி'களில் வரும், 'டாக் ஷோ'க்களால் யாருக்கு, என்ன பயன்?

எல்லாருக்குமே பயன்தான்; தெரியாத விஷயங்கள், மாறு பட்ட சிந்தனைகள், ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவர்களுக்கு உள்ள அக்கறை, கருத்துகளை தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிதான், 'டாக் ஷோ'க்கள்; அதை ஏன் வெறுக்கிறீர்கள்!

சி.ஜேம்ஸ், ஓடைப்பட்டி: டென்ஷனாகாமல் நிம்மதியாக, சந்தோஷமாக இருக்க வழி சொல்லுங்களேன்... எனக்கு மூக்கு நுனியில் வரும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தான் கேட்கிறேன்...

இதற்கு மனப் பயிற்சி அவசியம். 'நான் கோபப்பட மாட்டேன்; எனக்கு கோபமே வராது...' என ஜபம் செய்வது போல் திரும்பத் திரும்ப உங்களுக்குள்ளேயே சொல்லிக் கொள்ளுங்கள். கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தால், 'கோபத்தை என்னிடமிருந்து அகற்று...' என தினமும் வேண்டுங்கள்; இந்த மனப்பயிற்சி நாளாவட்டத்தில் கோபத்தை நிச்சயம் போக்கி விடும். அப்புறம் ஏது டென்ஷன்!

எ.சுமந்திரன், கூத்தப்பாக்கம்: எதிலும் திருப்தி அடையாதவர்கள் ஆண்களா, பெண்களா?

முதலாமவர் தான்...'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து...' என்ற குணம் உடையவர்கள் பெண்கள் தான்!






      Dinamalar
      Follow us