தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : டிச 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 17, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* எம்.காளிதாசன், தேனி: வெகுஜன எழுத்தாளருக்கும், இலக்கிய எழுத்தாளருக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டாமவர், முதலாமவர் இடத்தை அடைய பிரயாசைப்படுபவர்; அடைய முடியாமல் அவஸ்தைப்பட்டு, முதலாமவரையும், அவர் எழுத்துக்களை வெளியிடும் இதழ்களையும் இகழ்பவர்... படிப்பவர்களுக்கு ஒரு துளியும் தம் எழுத்து புரிந்து விடக்கூடாது என்பதிலும் வெகு கவனமாக இருப்பவர், இரண்டாமவர்!

எஸ்.மோகன், சென்னை: ஆங்கிலம் கற்க ஏராளமான நுால்கள் இருக்கின்றன; எதைப் படிக்கலாம் என தெரியவில்லையே...

புத்தகங்கள் மூலம் முழுமையாக ஆங்கிலத்தை அறிந்து கொள்ளவோ, பேசவோ முடியாது; ஆசான் மூலமே ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ள முடியும். ஆங்கிலப் பாடம் எடுக்கும் கல்லுாரி ஆசிரியரை தேட ஆரம்பியுங்கள்!

எல்.சுந்தர்ராஜன், உடுமலைப்பேட்டை: உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும்?

'வணக்கம்' போட்டு, தன் பாட்டில் போய்க் கொண்டே இருப்பவர்களை; இவர்களால் என் நேரம் வீணாவதில்லை பாருங்கள்!

* சி.பழனிச்சாமி, கோவை: மனைவி சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் கணவன் தானே புத்திசாலி?

பிழைக்கத் தெரிந்தவன்; மீனாட்சி ஆட்சி நடைபெறும் வீடுகளில், மனைவியின் சொல்லை அப்படியே அமோதித்து நடக்கும் கணவன், குடும்ப நிம்மதியை முதலாவதாக எண்ணுபவன்... எனவே, அவன் புத்திசாலியும் கூட!

க.சரவணன், அங்கேரிபாளையம்: திருமணங்கள், தோல்வியில் முடிவதற்கு காரணம், 'செக்ஸ்' பிரச்னைதான் என்று ஒரு கருத்து நிலவுகிறதே... இது, எந்த அளவுக்கு உண்மை?

இக்கருத்தில், ஓரளவுக்கு உண்மை இருப்பதாக, 'அன்புடன் அந்தரங்கம்' பகுதியில் வெளிவரும் கடிதங்கள் மூலம் உணர முடிகிறது.

ச.பானுப்பிரியா, காஞ்சிபுரம்: இன்றைய இளைஞர்களிடம் உள்ள மிகப்பெரிய பலவீனம் எது?

'எல்லாம் தெரியும்' என, நினைக்கும் மனோபாவம்; இவர்களுக்கு ஏதாவது ஒரு சப்ஜெக்டிலாவது ஆழமான அறிவு இருக்குமா எனத் தேடினால், 'ஜீரோ'வாகதான் இருக்கின்றனர், 90 சதவீதத்தினர்!

எல்.மாடசாமி, வந்தவாசி: கிரிக்கெட் பார்ப்பதற்காக, விடியற் காலையிலேயே, 'டிவி' முன் அமரும் நண்பர் கூட்டத்தை என்ன சொல்லித் திருத்துவது?

'லைன் மேனை' கைக்குள் போட்டு, கரன்ட்டை, 'கட்' செய்வது தான் நம்மால் முடிந்த ஒரே வழி. காரணம்: கிரிக்கெட் பித்தம் தலைக்கேறியவர்களை, வாய் வார்த்தைகளால் திருத்த முடியாது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us