தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மார் 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி.மாணிக்கம், மதுரை: மழலையின் சிரிப்பு, கன்னியின் சிரிப்பு, பாட்டியின் சிரிப்பு... எது பிடிக்கும்?

முதலாவதும், மூன்றாவதும் பார்த்து ரசித்து இருக்கிறேன்... கள்ளம், கபடமில்லாமல் இருக்கும்... பார்த்துக் கொண்டே இருக்கலாம்; இரண்டாவது சிரிப்பு பற்றி, 'ஐடியா' இல்லை!

எல்.தனபால், கோவை:நம் நாட்டை போலவே வெளிநாட்டு மக்களும் ஜாதகம், ஜோசியம் பார்க்கின்றனரா?

மனிதன் எங்கு இருந்தாலும் ஜாதகம், ஜோசியம் அங்கு இருக்கும்; மனிதனாகப் பிறந்தவனுக்கு தன் எதிர்காலத்தை பற்றிய பயம் இருக்கும் வரை, ஜோசியத்திற்கு அழிவில்லை!

என்.ராமநாதன், திருவண்ணாமலை:இந்தியாவில் பெரும்பாலான தம்பதியர் போலி வாழ்க்கை நடத்துகின்றனரே...

மேற்கத்திய நாடுகளைப் போல, பிடிக்கவில்லை என்றால் வெட்டிக் கொண்டு போக முடியாதே இங்கே... முதல் காரணம், ஊர் வாய்; இரண்டாவது, பெண்களின் சுயச் சார்பின்மை! இதனால், இங்கே, போலி வாழ்க்கை வாழ்ந்தே ஆக வேண்டும்!

பி.வேல்முருகன், புதுச்சேரி: நாளிதழ்களில் தினமும் என்னைப் பற்றி ஏதாவது செய்தி கொட்டை எழுத்துக்களில் வந்து கொண்டே இருக்க வேண்டும்... இதற்கு என்ன செய்ய வேண்டும்?

'அரசியல் தொழில்' செய்ய வேண்டும்!

* என்.சஞ்சீவி, திண்டுக்கல்: இன்றைய பெண்கள், ஆண்களிடமிருந்து முக்கியமாக எதை விரும்புகின்றனர்?

தன்னையும், ஒரு மனித ஜென்மாவாக மதித்து நடத்த வேண்டும் என்பதை விரும்புகின்றனர்; எதிர்பார்க்கின்றனர்!

வி.மூர்த்தி, அரக்கோணம்: தமிழகத்தில், முதியோர் இல்லங்கள் பெருகுவதைத் தடுக்க முடியுமா?

இந்தியாவிலேயே, கேரளத்துக்கு அடுத்து தமிழகத்தில் தான் அதிக முதியோர் இல்லங்கள் இருக்கின்றனவாம்... நம் சமுதாய அமைப்பில் கூட்டுக் குடும்பங்கள் வெகு விரைவாக குறைந்து வருகிறது...இதனால், முதியோர் இல்லங்கள் பெருகத்தான் செய்யும்!

* எஸ்.கிருஷ்ணன், காஞ்சிபுரம்: 'நீ என்ன ஜாதி?' என்று கேட்காத மனிதன் யாரும் இருக்கிறார்களா?

இருக்கின்றனர்; நேரடியாகக் கேட்க மாட்டார்கள் இவர்கள்... 'தம்பி, உங்க தாத்தா பேரு என்ன?' என, நாசூக்காகக் கேட்பர்... வெறுமனே, 'முத்து ராமலிங்கம்' என, பதில் சொன்னால்,'உங்க அம்மாவோட அப்பா பெயரென்ன?' என, அடுத்த கேள்வியை எடுத்து விடுவர்; நம்மாள், 'மாடசாமி தேவர்' என்று, 'இன்னொசென்ட்'டாக கூறுவர். விஷயம் கிடைத்த ஜோரில், பேச்சை மாற்றி, காரியத்தை சாதித்துக் கொள்வர்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us