தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அடுத்தவர் சாபத்துக்கு ஆளாகலாமா?

அடுத்தவர் சாபத்துக்கு ஆளாகலாமா?

அடுத்தவர் சாபத்துக்கு ஆளாகலாமா?


PUBLISHED ON : மார் 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'உழைப்பவரின் வியர்வை காயும் முன், கூலி கொடுங்கள்...' என்பது பொன்மொழி. கஷ்டப்பட்டு உழைப்பவனை வஞ்சிக்க நினைத்தால், அவனை, தெய்வம் தண்டிக்கும் என்பதை விளக்கும் கதை இது:

பதுமயோனி என்பவன், தீய வழிகளில் பொருள் ஈட்டி, பெரும் மாளிகையில் வாழ்ந்தான். அவனிடம் வேலைக்கு வருவோரிடம், நன்றாக வேலை வாங்கி, ஊதியம் தராமல், சாமர்த்தியமாக ஏமாற்றி விடுவான்.

இந்நிலையில், பதுமயோனியிடம் வேலை கேட்டு வந்தார் சமையல்காரர், தேவதத்தன். இவர், மறந்தும், அடுத்தவருக்கு தீங்கு நினைக்காதவர். அதிகாலையில் எழுந்து, நீராடி, இறை வழிபாடு செய்து, சமையல் தொழிலில் தனக்கு கிடைக்கும் சிறு வருமானத்தில், இயன்ற வரை அடுத்தவருக்கு உதவுவது என, வாழ்ந்து வந்தார்.

தேவதத்தன் வேலை கேட்டு வந்ததும், 'உள்ளூர்ல என்னை பத்தி தெரிஞ்ச எவனும் எங்கிட்ட வேலைக்கு வரமாட்டான்; விவரம் தெரியாம வந்து நம்ம கிட்ட மாட்டிக்கிட்டான்...' என்று எண்ணி, தேவதத்தனை தன் சமையல்காரராக சேர்த்துக் கொண்டான், பதுமயோனி.

'நீ, எனக்கு நல்ல முறையில் சமைத்துப் போட்டால், உனக்கு ஏராளமாக வெகுமதி அளிப்பேன்...' என்றான் பதுமயோனி.

தேவதத்தனும், பதுமயோனியிடம் ஓர் ஆண்டு காலம் சமையல்காரராக வேலை செய்தார்; அதே சமயம், தன் வழிபாடுகளையும் தவறாமல் செய்து வந்தார்.

ஆனால், பதுமயோனியோ, தேவதத்தனுக்கு எதுவும் கொடுக்கவில்லை. தனக்கான ஊதியத்தை கேட்ட போது, 'நீ வேலை பார்த்தது போதும்; போ வெளியே...' என, விரட்டினான்.

ஊதியம் கேட்டு எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார், தேவதத்தன். கொடுக்க மறுத்ததுடன், அவரை இழிவாக பேசினான், பதுமயோனி.

அதனால், பொறுமை இழந்த தேவதத்தன், 'நான், தெய்வத்தை என் உள்ளத்தில் வைத்து வழிபாடு செய்வது உண்மையாக இருந்தால், நீ, உன் பொருளையெல்லாம் இழந்து, பேயாக கடவாய்...' என, சாபம் கொடுத்து, சென்று விட்டார்.

நல்லவர்கள் சாபம் பலிக்காமல் போய் விடுமா... தேவதத்தனின் சாபம் பலித்தது. வெகு விரைவிலே, செல்வத்தையெல்லாம் இழந்து, பேயாக மாறினான், பதுமயோனி.

நல்லொழுக்கம் நிரம்பியவரின் மனதில் தெய்வம் குடியிருக்கும்; அப்படிப்பட்டவர்களின் வாயில் விழக்கூடாது. அது, அழிவையே தரும்!

பி.என்.பரசுராமன்

அறிவோம் ஆன்மிகம்!

வீட்டில், 'கோமுக நீர்' தெளியுங்கள்!

கோவில்களில் மூலஸ்தானத்திலிருந்து வெளிவரும் அபிஷேக தீர்த்தத்திற்கு, 'கோமுக நீர்' என்று பெயர். இறைவனின் உடலில் பட்ட அபிஷேக நீர், தங்கள் மீதும் படும் வகையில், ஆயிரமாயிரம் தேவதைகள் இதில் இருப்பதாக சொல்வர். வைகாசி விசாக தினத்திலும், கோமுக நீரை வீட்டிலும், வியாபார தலங்களிலும் தெளித்து வழிபாடு செய்தால், வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us