தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : செப் 29, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஜி. ராஜகுரு, சென்னை:'பகுத்தறிவு, கடவுள் இல்லை...' என்று பேசிய அரசியல் கட்சிகள் எல்லாம் இப்போது, ஆன்மிகம் பக்கம் திரும்பி விட்டனவே...

உங்கள் மறதி நோயை, மருத்துவர் மூலம் சரிப்படுத்திக் கொள்ளுங்கள். சட்டசபையில், எம்.ஜி.ஆர்., எப்போது காலடி எடுத்து வைத்தாரோ, அன்று முதல் இவர்கள் நெற்றி, குங்குமத்தாலும், சந்தனத்தாலும், விபூதியாலும் பளபளக்க ஆரம்பித்து விட்டதே!

என்.எம். சுப்பிரமணி, சென்னை: பேனர் கலாசாரம் ஒழிந்திடுமா?

ஒழிய வேண்டும் என்பது தான், அனைவரின் விருப்பமாக உள்ளது! ஆனால், 'காந்தி' ரசிகர்கள் அழிய மாட்டார்களே... அதுவரை தொடரத்தான் செய்யும்!

கோ. குப்புசுவாமி, சென்னை: திஹாரில் உள்ள சிதம்பரம், என்ன நினைத்துக் கொண்டிருப்பார்...

முதலில், இந்தியா தவிர, மற்ற நாடுகளில் உள்ள சொத்துகளை! இரண்டாவது, வீட்டுச் சாப்பாடு கிடைக்காது என்று ஜெயிலில் சொல்லி விட்டனரே... இனி, வீட்டிற்கு போய் பால் பணியாரம், கருப்பட்டி பணியாரம், கந்தர் அப்பம், ஒக்காரை, காரைக்குடி சிக்கன் கறி, சுவரொட்டி கறி, கெண்டை மீன் வறுவல்... இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்.

இவற்றை அசை போட்டுக் கொண்டிருக்கலாம்!

* என். சாந்தாமணி நடராஜன், ஜீவானந்தபுரம், மேட்டுப்பாளையம்:'பள்ளி விடுமுறை விட்டதும், குழந்தைகளுடன் சுற்றுலா செல்கிறாளே என் தோழி... இது, வீண் செலவு தானே?

தவறே இல்லை... மிக நல்ல விஷயம். இல்லாவிட்டால் நீங்கள் வசிக்கும், ஜீவானந்தபுரத்தை தவிர, மற்ற இடங்கள் தெரியாமல் போகும்! சுற்றுலா என்பது, அறிவு வளர்ச்சியின் ஒரு பகுதி!

கி. ரவிக்குமார், நெய்வேலி: நீர் சிக்கனம் குறித்து தெரிந்து கொள்ள, பல நாடுகளுக்கும் முதல்வர் போக வேண்டுமா? மீண்டும் செல்லப் போகிறாராமே? இங்கு இல்லாத நீர் மேலாண்மையா?

அதென்னமோ உண்மை தான்; அங்கு பார்த்து வந்த சிக்கனத்தை, நம்மவர் சரியாக செய்து வருகின்றனரா என, மீண்டும் ஒருமுறை பார்க்க வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுமோ என்ற எண்ணத்தில் தான்!

* பாரதி முருகன், மணலுார்பேட்டை: அரசியல்வாதிகள் எல்லாம் ஊழல் செய்வதை விட்டு விட்டால்?

ஒரு, ஆர்.சி., - ராயல் சேலஞ்ச் விஸ்கி வாங்கி, அதில் எதையும் கலக்காமல், ஒரு மணி நேரத்தில் முடித்து விடச் சொல்கின்றனர். உணர்வே இல்லாத நேரத்தில், இவை எல்லாம் கனவில் வரலாமாம்... என்ன, செய்து பார்க்கும், ஆர்வம் துளைக்க ஆரம்பித்து விட்டதா...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us