sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : அக் 20, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* டி.வி. அய்யாச்சாமி, திருப்பூர்: காக்கா பிடித்திருக்கிறீர்களா?

இல்லை, 'பிரண்ட்' ஆக்கிக் கொண்டிருக்கிறேன். நாலு துண்டு ரொட்டியை, பதமாக தண்ணீரில் பிசைந்து, காலை, 7:00 மணிக்கு, வீட்டு திண்ணையில் அமர்ந்தால் போதும்... என்னை சுற்றி, 10 பேர் அமர்ந்து விடுவர்... மற்றவர்கள் கீழே!

கூடவே அமரும், 10 பேருக்கும் என்னை அடையாளம் தெரியும்; எனக்கும்! 'கா கா' என கத்தி, இடைஞ்சல் கொடுக்காமல், நான் போடும் உருண்டையை எடுத்து, பறந்து விடுவர்; மீண்டும் அடுத்த நாள் காலையில் தான்!

* எல். சிதம்பரம், காரைக்குடி: மாடு வளர்ப்பவன் பிச்சைக்காரனா?

வீடு வீடாக சென்று, புல், வைக்கோல் மற்றும் மருந்து வாங்கணும்ன்னு, மாடு வளர்ப்பவர்கள் கையேந்தணும்... கன்று குட்டிக்கு விடும் பாலை கூட ஒட்ட கறந்து, சுண்ட காய்ச்சி பருகி உடம்பை தேத்தலாம்; ஆனால், பசு எக்கேடு கெட்டால் என்ன என்ற மனநிலைதானே, இந்த அரசியல் கட்சிகளிடமிருக்கிறது!

வி. ஜெயா, கடையநல்லுார்: 'மஞ்சள் ஒரு மங்களமான நிறம்... தினமும் முகத்தில் பூசு...' என்கிறாளே, என் பாட்டி!

உண்மை தான்! முகத்தில் தினமும் பூசி வந்தால், பெண்களுக்கு மீசை முளைக்காது. ஆனால், மஞ்சள் காமாலையும், மஞ்சள் நோட்டீசும் ரொம்ப, 'டேஞ்சர்' ஆனவை!

அ. குமரன், சென்னை: தமிழனுக்கு, இன்று எதன் மீது பாசம் அதிகம்!

'டாஸ்மாக்' மீது தான்! 'இனி, மாலை, 5:00 மணி முதல், 8:00 மணி வரை தான் திறந்திருக்கும்...' என, ஒரு,'டுபாக்கூர்' செய்தியை, 'நெட்'டில் பார்த்ததும், 'மூன்று நாட்களுக்கு, சரக்கு வாங்கி, 'ஸ்டாக்' வைக்க, என்னிடம் காசில்லையே...' எனக் கதற ஆரம்பித்து விட்டானே!

எம். பாலசுப்பிரமணியன், திண்டுக்கல்: வாரமலர் இதழுக்கு அனுப்பும் படைப்புகள், எத்தனை வாரத்திற்குள் வெளியாகும்? அக்கால கட்டத்திற்குள் வெளியாகவில்லை என்று தெரிந்தால், அதையே மற்ற இதழ்களுக்கு அனுப்பலாம் தானே!

குறைந்தது, இரண்டு மாதங்கள் ஆகலாம்; இதே நிலையே மற்ற இதழ்களிலும்! அதே படைப்பு, மற்ற இதழ்களில் வெளியாகி விட்டது என்று தெரிந்தால், எங்களுக்கு அனுப்பப்பட்டதை, 'கில்' செய்து விடுவோம்! 'ரிட்டர்ன் ஸ்டாம்ப்' இருந்தால், திருப்பி அனுப்பி விடுவோம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us