தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மே 22, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** எஸ்.பக்கிரிசாமி, திருவாரூர்: கொலை, கொள்ளையால் பாதிக் கப்பட்டவர்கள், 'இழந்தது இழந் தாச்சு... ஆளை விடுங்க...' என, போலீசிடம் கெஞ்சிக் கூத்தாடும் நிலைமைக்கு வந்து விடுகின்றனரே...

உண்மைதான்... மக்களின் தோழ னாக, அவனுக்கும், அவன் உடமைக்கும் காவலனாக இருக்க வேண்டியவர்கள், நேர்மாறாக செயல்படும் கலாச் சாரத்தை வளர்த்து விட்டனர் அரசியல்வாதிகள். எந்தக் குற்றமும் செய்யாமல், பெல், பிரேக், லைட் எல்லாம் சைக்கிளில் இருந்தால் கூட, 'காத்து கம்மியா இருக்கே... துட்டு வெட்டு!' என்ற இழிநிலை உள்ளது இப்போது!

***

*பா.ராமச்சந்திரன், மதுரை: தவறு செய்யும் போது, பெற்றோர் கண்டித்தால், 'என்னை ஏன் பெத்தீங்க?' என்று கேள்வி கேட்கும் இக்கால குழந்தைகள் பற்றி...

'தும்பை விட்டு வாலைப் பிடிக்கும்...' செயல். இதுபோன்ற சொல் கேட்கும் அளவுக்கு விட்டது பெற்றோர் தவறு. முளைச்சு, துளிர் விட ஆரம்பிக்கும் போதிலிருந்தே கவனமாக பராமரிக்க ஆரம்பித்தால், இந்தக் கதி நேராது!

***

** ப.ஜமீலா, கோவில்பட்டி: முன்னேறிய நாடுகள் என்று கூறப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டமே கிடையாதா?

ஏன் இல்லாமல்? இங்கிலாந்தில், பத்து லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வேலை வேண்டி பதிவு செய்துள்ள தாக சமீபத்தில் படித்தேன்; அமெரிக்காவிலும் இதே கதி உண்டு. அரபு நாடுகளிலும், 'ரிசர்வேஷன்' - ஒதுக்கீடு முறை கொண்டு வந்துள்ளனர் உள்ளூர் ஆசாமிகள். அவர்கள் முட்டாள், மூடர், படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தாலும், குறிப்பிட்ட சதவீத வேலை வாய்ப்பு, உள்ளூர் மக்களுக்கு கண்டிப்பாக ஒதுக்கப்பட வேண்டும் என்று, அரபு நாடுகள் சிலவற்றில் சட்டமாக்கப்பட்டுள்ளது.

***

*எஸ்.முரளி, குறிஞ்சிப்பாடி: சாமுத்திரிகா லட்சணப்படி, மீசை யுடன் தாடியும் வளர்ப்பவர்கள், அர்த்தபூர்வமான வாழ்க்கையை விரும்புகிறவர் களாகவும், சாதனை விரும்பி களாகவும் இருப்பராம்! இதன்படி, நீங்கள் நடத்தும் அர்த்தபூர்வமான வாழ்க்கையில் எதை சாதிக்க விரும்புகிறீர்கள்?

நம்ம தாடி - மீசை விஷயம், உங்களுக்கு எப்படி தெரியும்?

***

** ப.ஜோதி ரவி, விருதுநகர்: அரசியலில், 'பே ரோல் லீடர்ஸ்' உள்ளனர் என்கின்றனரே... இதன் பொருள் என்ன? அப்படிப்பட்டவர் கள் தமிழகத்தில் உள்ளனரா?

அரசு துறைகளில் தமக்கு வேண்டிய காரியங்களை சாதித்துக் கொள்ள, அரசியல்வாதிகளால் தங்கள் நிறுவனங் களுக்கு இடையூறு நேராமல் இருக்க பிரபல தொழில் நிறுவனங்கள், தம் சம்பள பட்டியலில், அரசியல் வாதிகள் பலரை கட்சி வேறுபாடின்றி வைத்திருக்கும். இவர்கள், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மாதா மாதம் குறிப்பிட்ட தொகை இவர்களுக்கு சென்று விடும். இதையே ஆங்கிலத்தில், 'பே ரோல் லீடர்ஸ்' என்கின்றனர். தமிழகத்தில் மட்டு மல்ல... உலகின் பல நாடுகளிலும் இப்படிப்பட்டவர்கள் உள்ளனர்.

***

*அ.மதியழகன், கோவை: டில்லியில் வாழும் தமிழர்கள், ஜாதி, மத பேதமின்றி ஒன்றுபட்டு வாழ் கின்றனர். தமிழ்நாட்டில் அந்த மனப்பான்மை இல்லையே...

கல்வி, பல கலாச்சாரங்களின் அறிமுகம், 'தான்' என்ற அகம் பாவத்தை நீக்கி விடுகிறது. தமிழ்நாட்டையே எடுத்துக் கொள்ளுங்கள்... சென்னையில் வாழும் பிற மாவட்டத் தமிழர்கள், ரொம்ப, 'ரிபைன்' ஆகி உள்ளனர்... டில்லியைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

***

*ம.நளினி, சென்னை: ஒரு சிறுகதை எழுதி முடிக்க, ஐம்பது பக்கங்களை வீணாக்கினேன்... இது வெற்றியா, தோல்வியா?

வெற்றிக்கு முதல்படி... 'பர்பெக்ஷன்' வேண்டும் என்ற அடிமன எண்ணம் தான், எழுதிய பக்கங்களை கிழிக்கச் செய்து இருக்கிறது... இதே போல தொடர்ந்து முயலுங்கள்... முழு நீள வெள்ளைத் தாளில் ஆறு பக்கங்களில் அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுதப் பழகி விடலாம்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us