sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : டிச 27, 2020

Google News

PUBLISHED ON : டிச 27, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலை சந்தர், சென்னை: நடிப்பில் கொடி கட்டிய கமல், கோட்டையில் கொடி ஏற்றுவாரா?

கண்டிப்பாக! தன் அடுத்த படத்தில், 'செட்' போட்டு, கொடி ஏற்றுவார்!

* ஜி. குப்புசாமி, கள்ளக்குறிச்சி: 'தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில், 80 சதவீதம், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும்... இதற்கு அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும்...' என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறுகிறாரே...

முதலில், தமிழக கட்டட வேலைகளுக்கு, 80 சதவீத தமிழர்களை, அவர் கொண்டு வரட்டும்; பிறகு, மற்ற தனியார் நிறுவன வேலைகள் பற்றி பேசட்டும்!

'கொரோனா' பயத்தால் புலம் பெயர்ந்த தொழிலாளர் இன்மையால், அத்தொழில் படும் அவதி பற்றி, முதலில் அவர் தெரிந்து கொள்ளட்டும்!

டி. ஈஸ்வரன், சென்னை: எம்.ஜி.ஆர்., நினைவு தினத்தன்று, மறக்காமல், அவர் படத்தை அட்டையில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறீர்கள். ஏன்?

ஒரு பாவமும் செய்யாமல் கட்சியிலிருந்து துாக்கி எறியப்பட்டவர். தன் இறப்பு வரையும், அதன் பின்னரும், தம் கட்சிக்கு ஓட்டு வாங்கி அளித்தவர்... மக்களின் தலைவனாகத் திகழ்ந்தவர். அதனாலேயே அட்டைப் படம்!

கு. கணேசன், சென்னை: நாம் இழந்தால் மீண்டும் பெற முடியாதது எது?

செல்வாக்கு, பணம், புகழ், நற்பெயர் இவை அனைத்தையுமே திரும்பப் பெறுவது கடினம்!

* ந. சண்முகம், திருவண்ணாமலை: தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, கருணாநிதியின் மகன், மு.க.அழகிரி தனிக் கட்சி தொடங்குவாரா?

தென் மாவட்டங்களில் அவருக்கு ஆதரவு அதிகம் என்பது, தி.மு.க., தலைமைக்குத் தெரியும். இதையும் மறுத்து, அவரை, தி.மு.க.,வில் இணைத்துக் கொள்ளவில்லை எனில், கருணாநிதி பெயரில் கட்சி ஆரம்பித்து விடுவார்!

ஆர். பிரகாஷ், திருச்சி: வணக்கம், 'குட்மார்னிங்' - இதில் எதைச் சொல்வது உங்கள் வழக்கம்?

'குட்மார்னிங் - குட் ஆப்டர்நுான், குட் இவினிங்' எல்லாம் என்னிடம் கிடையாது... 'இனிய மகிழ்ச்சியான காலை வணக்கம்...' அதே போலவே, 'மதிய வணக்கம்... மாலை வணக்கம்' என்பதுவே, என் பழக்கம்!

இதைச் சொல்லவே பலர் வெட்கப்படுகின்றனர் என்பது தான் வேதனை!

ரா. மனகாவலன், சென்னை: 'எனக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது, என் மனைவிக்கும்...' என்று, ஸ்டாலின் மகனும், தி.மு.க.,வின் இளைஞர் அணித் தலைவர், உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது, கடவுள் நம்பிக்கை உள்ள, முஸ்லிம், கிறிஸ்தவர் மற்றும் ஹிந்துக்களுக்கு எதிரானது அல்லவா?

இதற்கான பலனை, வரும் தேர்தலில் அவர்கள் உறுதியாக சந்திக்கப் போகின்றனர் என்பதில் சந்தேகமே இல்லை!






      Dinamalar
      Follow us