sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜன 31, 2021

Google News

PUBLISHED ON : ஜன 31, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எஸ். சந்திரன், மேலுார்: நான் வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன்... அதற்கு, உதவியாய் இருப்பது எவை?

நமக்கு சரியான துணை, நம் வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகள் தான்! இந்த தோல்வி அனுபவங்கள், நம்மை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும்!

ஆ. மஞ்சு, ஈரோடு: கண்ணாடி போடாமல் கடைசி வரை வாழ முடியுமா?

இப்போதுள்ள பழக்க வழக்கங்களால் முடியவே முடியாது; அதுவும் போக, இப்போதுள்ள உணவு பழக்கங்களாலும், கண்ணாடி நிலை ஏற்படுகிறது. கண்ணாடி வேண்டாம் என்றால், ஆபரேஷன் மூலம் கண்ணுக்குள்ளேயே, 'லென்ஸ்' பொருத்திக் கொள்ளும், 'டெக்னாலஜி'யும் வந்து விட்டது; அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்!

ஆர். ஜெயந்தி, நெல்லை: தம்பதியர், தமக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்புகின்றனரா, பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்புகின்றனரா?

பெண் என்றால் செலவு என்ற பொதுவான கருத்தாலும், வருமானம் வரும் என்ற எதிர்பார்ப்பால், ஆண் குழந்தையையே விரும்புகின்றனர்!

* முருகு. செல்வகுமார், சென்னை: தி.மு.க.,விற்கு அதன் கூட்டணி கட்சிகள் கட்டுப்படுவது போல், அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் அவ்வாறு இருப்பதில்லையே... ஏன்?

ஆட்சியில் இல்லாத, தி.மு.க.,வால் எதுவும் செய்ய முடியாது என்பதால், மவுனம்! இதுவே, 'கூட்டணியை முறிப்போம்...' என்று பயம் காட்டுவதால், 20 சதவீத போராட்டம்; அவ்வளவு தான்!

ஆர். ஜெயலட்சுமி, சென்னை: சனி பெயர்ச்சி உமக்கு எப்படி?

வீண் குழப்பங்களுக்கும், மன உளைச்சல்களுக்கும் நான் இடம் கொடுக்க மாட்டேன். அதனால், இவற்றை படிப்பதும் இல்லை; பிறர் சொல்ல, கேட்பதும் இல்லை!

எஸ். முருகராஜ், மதுரை: எப்போதும் உண்மையே பேச வேண்டும் என்கின்றனரே...

உண்மையே பேசினால், அதை மறக்க முடியாது... பொய் பேசினால், நினைவில் வைத்துக் கொள்வது சிரமமாயிற்றே!

* எஸ். முருகேசன், திருத்தங்கல்: முதல்வர் ஆவதற்கு உடல் தோற்றமும் முக்கியம்தானே... கமல், முரட்டு மீசை மற்றும் முரட்டு தோற்றத்துடன் காணப்படுகிறாரே... இவர், முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாமா?

ஆசைப்படலாம்! இந்த தோற்றத்தில் இருப்பவர்களைக் கண்டுதானே பிறர் பயப்படுகின்றனர்! லஞ்ச அரசு அதிகாரிகளுக்கு பயம் ஏற்படும் தானே!






      Dinamalar
      Follow us