தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : செப் 05, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 05, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அப்துல், திருச்சி: 'பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்...' என்று, தி.மு.க.,வினரை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளாரே...

சும்மா தமாஷ் செய்கிறார்! 'பேனர்' வைப்பவர்களை, கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கியும், அடிப்படை உறுப்பினராகவும் இருக்க விட மாட்டேன் எனவும், அறிவிக்க வேண்டியது தானே... அப்புறம், 'பேனர்'கள் இருக்குமா?

* ஸ்ரீ. பூவராகவன், காங்கேயம்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழில் பட்ஜெட் வாசிக்க தடுமாறினாரே...

இவர்கள் தான் தமிழை வளர்க்கப் போகின்றனராம்... இவருக்கு நிதி அமைச்சர் பதவி வேறு!

வி. வினாயகமூர்த்தி, சென்னை: 'கவிதைச்சோலை'க்கு படைப்புகள் அனுப்பும்போது, வாசகர்கள் தங்கள் புகைப்படங்களையும் சேர்த்து அனுப்பலாமா; வெளியிடுவீர்களா?

'ஓ! தாராளமாக அனுப்பலாம்; வெளியிடுவோம்!' என்கிறார் பொறுப்பாசிரியர்!

* எஸ்.கே. சவுந்தர்ராஜன், திண்டுக்கல்: உங்களுக்கு இதுவரை வந்த கேள்விகளில் படிக்காதது எது?

முதலாளிகளை என்னால் அவமதிக்க முடியுமா? முதலில், 'இன்லண்ட் லெட்டர்' அடுத்தது, அஞ்சல் அட்டை, மூன்றாவது, மின் அஞ்சல்... இதில், மூன்றாவது அவ்வப்போதே வந்து விடும் என்பதால், அப்போதே படித்து விடுவேன். எதையும் தவற விடுவதில்லை!

ஏ.கே. சஞ்சீவிநாதன், அவ்வையார்பாளையம், ஈரோடு: அ.தி.மு.க., மாஜிகள் மீது, வழக்குகள் பாய்வது, பழிவாங்கும் நடவடிக்கையா?

இல்லை! ஊழல் செய்திருக்கின்றனர் என சந்தேகம் ஏற்பட்டதால் எடுக்கப்படும் நடவடிக்கை! ஊழல் நிரூபிக்கப்பட்டால், சட்டம் அவர்கள் மேல் பாயும்!

வி.பி. ஆலாலசுந்தரம், கோவை: முதல்வர் ஸ்டாலின் வீட்டிலுள்ள பூஜையறையில், காயத்திரி மந்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற சமஸ்கிருத பாடல்களை அவர்கள் பாடலாம்; அதை இறைவன் ஏற்றுக்கொள்வார். ஆனால், கோவில்களில் மட்டும் கூடாதா? இது என்ன நியாயம்?

முதல்வர் மனைவி துர்காவிடம் தான் கேட்க வேண்டும்!

டி. பசுபதி, ஊஞ்சவேலாம்பட்டி, கோவை: சமீபத்தில், சென்னையை விட்டு வேறு எங்காவது சென்று வந்தீர்களா?

இல்லை! கடைசியாகச் சென்றது மதுரை மட்டுமே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us