தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : மார் 27, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 27, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கி. வேலுமணி, சேலம்: வாழ்வில் சுகமானது எது?

எதன் மீதும் பற்றின்றி, அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு வாழ்வது... ஆனால், சாமானியர்களான நம்மால் முடியுமா?

மோ. லதா, சென்னை: விரைவில் மருமகள் வர இருக்கிறாள்... நான் மாமியாராகப் போகிறேன்... எனக்கு அறிவுரை கூறுங்களேன்...

விரைவில் திருமணம் முடிந்து, உங்கள் வீட்டிற்கு வர இருக்கும் பெண்ணை, நீங்கள் பெற்று எடுக்காத மகளாக நினைத்து நடந்து கொள்ளுங்கள்... எல்லாம் சுபமாக நடக்கும்!

கே. பிரபாகர், சென்னை: இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளும், தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனவே...

நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேனே... நம் மீனவர்கள் மீது தான் தவறு! அவர்கள் எல்லை தாண்டுகின்றனர்... அதனால், கைதாகின்றனர்!

பி. மோகன்ராஜு, சென்னை: வெளிநாட்டு, உ.பா.,விற்கும், நம் நாட்டு, 'சரக்கிற்கும்' உள்ள வித்தியாசத்தை, லென்ஸ் மாமாவிடம் கேட்டுச் சொல்லுங்களேன்...

அவர், 'விஸ்கி' மட்டும் தான் எடுப்பார்... அதுவும், ஸ்காட்லாந்தில் தயாரிக்கப்படும், 'பிளாக் லேபில்' தான். தற்போது, 'கொரோனா'வால் அது கிடைக்கவில்லையாம்; அதனால், உள்நாட்டு தயாரிப்பான, 'ராயல் சேலஞ்ச்' உ.பா.,விற்கு மாறி விட்டாராம். 'ரெண்டும் ஒரே, 'டேஸ்ட்' தான்...' என்கிறார்!

பி. மோகன், மதுரை: என் நண்பன், 'செவிடன்' ஆக உள்ளானே...

நல்லவற்றை கேட்க விருப்பம் உள்ளவராக இருப்பார் போலும்!

ஆர். ஜெயகுமாரி, சென்னை: தங்களின் நண்பர் காஷ்மீர் பண்டிட், ரோமேஷ் குமார் மட்டு எப்படி இருக்கிறார்?

நன்றாக இருக்கிறார்... அவ்வப்போது கைப்பேசியில் தொடர்பு கொள்கிறார்; நேரில் பார்த்து கொள்ளை காலம் ஆச்சு. பெங்களூரு, 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழில் தலைமை செய்தியாளராக இருந்தவர், தற்போது, வேறு பணியில் இருக்கிறார்!

அம்பை தேவா, சென்னை: எவ்வளவு துாரம் தனியாக உங்களால், 'டிரைவ்' செய்ய முடியும்?

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் தனியாகவே வண்டியை செலுத்த முடியும். ஒரு மணி நேரத்தில், 100 கி.மீ., கடந்து விடுவேன்!

* கி. ரத்தினம், சென்னை: எதை, விலை மதிப்பென்று கூறலாம்?

பிறருக்கு, காலமறிந்து செய்யும் உதவிகளை விலை மதிப்பென்று கூறலாம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us