தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜூலை 17, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* எம். மாறன், சென்னை: ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும், பழங்குடி வகுப்பை சேர்ந்த முதல் பெண் வேட்பாளரை, தி.மு.க., ஆதரிக்கவில்லையே...

'திராவிட மாடல்' ஆட்சி என்பது இது தான் என்று நிரூபித்துள்ளார், முதல்வர் ஸ்டாலின்!

பி. தினேஷ், கோவை: குற்றாலம் செல்ல, வாரமலர் இதழ் வாசகர்களுக்கு அழைப்பு விடுத்தது மகிழ்ச்சி என்றாலும், வார இறுதி நாட்களில் ஏற்பாடு செய்தால் வசதியாக இருக்குமே!

வார இறுதி நாட்கள் என்றால், குளிப்பதற்கு வரும் கூட்டம் எக்கச்சக்கமாக இருக்கும். மற்ற நாட்கள் என்றால் வாசகர்கள், கூட்டமில்லாமல் சுகமாய் குளிக்கலாம்... அதனால் தான்!

அம்பை தேவா, சென்னை: வெளிநாடுகளில் கார் ஓட்டிய அனுபவம் உண்டா?

லண்டனில் இறங்கி, விமான நிலையத்திலேயே, வாடகைக்கு கார் எடுத்து, இங்கிலாந்து முழுவதும் சுற்றி விட்டு, அங்கிருந்து, காரை கப்பலில் ஏற்றிக்கொண்டு, பிரான்ஸ் தலைநகர், பாரீஸ் சென்று விட்டு, அதன் தென் கோடி பகுதியான, 'மெடிட்டிரேனியன்' கடல் நகரம் சென்று, லென்ஸ் மாமாவுடன் திரும்பினேன்!

நம் நாட்டிலேயே, 'இன்டர்நேஷனல் லைசென்ஸ்' வாங்க முடியும்!

* எஸ். ராஜம், திருச்சி: மஞ்சள் பை பயன்படுத்தப்படுவது எந்த நிலையில் உள்ளது?

நான் பார்த்த வரை, கேட்ட வரை, 99 சதவீதம் இல்லை! எல்லா கடைகளிலும், ஹோட்டல்களிலும், இன்னும், 'பிளாஸ்டிக்' பைகளே உபயோகத்தில் உள்ளன!

அ. செந்தில்குமார், சூலுார், கோவை: 'போதையில் இருப்பவர், உண்மையைத்தான் பேசுவர்...' என்கிறார், என் நண்பர்... இது உண்மையா... லென்ஸ் மாமாவிடம் கேட்டு சொல்லுங்கள்...

லென்ஸ் மாமா மட்டும் அல்ல... உ.பா., பிரிய நண்பர்கள் பலரும், உண்மையைத்தான் பேசுவர்... (அன்று, மனைவியிடம் அடி வாங்கியதைப் பற்றியும் சொல்வர்!)

பெரியகுளம் தேவா, திண்டுக்கல்: 'வாரமலர்' இதழில், ஜோல்னாபையன் எழுதும் பெட்டி செய்திகளில், கேரள மாநில செய்திகள் வாரம் தவறாமல் இடம் பெறுகிறதே... அம்மாநிலத்தில் நமக்கு வாசகர்கள் இருக்கின்றனரா?

கேரளா மட்டுமல்ல... உலகம் முழுவதும் வாசகர்கள் இருக்கின்றனர். பல நாட்டு துணுக்குகளையும் தருகிறாரே ஜோல்னாபையன்... படித்ததில்லையா?

ஜா. ரவி, தஞ்சாவூர்: 'சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை, விடுதலை செய்ய வேண்டும்...' என்று, நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளாரே?

விடுதலையானால், தமிழகத்தில் வசிக்க, இவர் வீடு தருவாரா... அவர்களின் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்? இதையெல்லாம், அந்த விடுதிகளில் செய்து வருகிறதே, தமிழக அரசு!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us