sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : அக் 30, 2022

Google News

PUBLISHED ON : அக் 30, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர். மனோகர், திருச்சி: இடது கம்யூனிஸ்ட், டி.ராஜா, மீண்டும் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரே...



கேரளாவைத் தவிர, இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் இல்லையே... தமிழகத்திலும் அப்படித்தான். அதனால், மீண்டும், பொதுச் செயலராக வந்துள்ளார்!

மகேஷ், கன்னியாகுமரி: பெரும்பாலான லாரி டிரைவர்கள், தாடி, மீசை வைத்துள்ளனரே... இதற்கு என்ன காரணம்?



தொடர் வேலை காரணமாக, 'சலுானுக்கு' போக முடியாமல் தவிக்கின்றனர். அதனால் தான், தாடியும், மீசையும்!

* கு. மகேஷ், நெல்லை: குறையில்லாத நண்பர் ஒருவரை தேடுகிறேன்... எனக்கு கிடைப்பாரா?



கிடைக்கவே மாட்டார்... அப்படிப்பட்டவர்களைத் தேடினால், நீங்கள் நண்பர்களே இல்லாதவர் ஆவீர்கள்!

லலிதா அசோக், நாகப்பட்டினம்: வாழ்வில் வெற்றி பெற உதவுவது பட்டறிவா, படிப்பறிவா?



இரண்டாவது ஓரளவுக்கு உதவும்; முதலாவது ரொம்ப முக்கியம். ஏற்கனவே பட்டறிவு பெற்றவர்களிடம் அதைப் பெற்றுக் கொள்வது லாபகரமானது!

என். மாரியப்பன், கன்னியாகுமரி: 'சான்றோர்' எனச் சொல்கின்றனரே... அவர் யார்?



தக்க நேரத்தில் உதவி, துன்பம் போக்கியவரின் நட்பை, ஏழு பிறப்பிலும் நினைத்து போற்றுவோர் தான் சான்றோர்கள்!

சி. வசந்தன், கோவை: அறம் செய்ய வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறானே, என் நண்பன்!



நல்லது தானே! அறம் செய்வதை தள்ளிப் போடக் கூடாது... உடனுக்குடன் செய்ய வேண்டும்! நம் உடல் அழியும் காலத்தில், துணையாக நம்முடன் வருவது, அறம் மட்டுமே!

ஜெ.ஸ்ரீதர், காஞ்சிபுரம்: வன்முறையில் ஈடுபடும் கட்சிகளை அரசியலில் இருந்து நீக்கினால் என்ன?



அப்புறம் எந்தக் கட்சி தான் மிஞ்சும்!






      Dinamalar
      Follow us