sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : டிச 18, 2022

Google News

PUBLISHED ON : டிச 18, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மா. கண்ணா, பாப்பான்குளம்: 'லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை. தொண்டர்கள் நிர்ப்பந்தித்தால் போட்டியிடுவேன்...' என, துரை வைகோ கூறியுள்ளாரே...

'தொண்டர்கள் விருப்பம்' என, அவர்கள் தலையில் பழியைப் போட்டு, லோக்சபா தேர்தலில் நிற்பார் என்பதே உறுதி. ஆனால், ஜெயிக்க மாட்டார்... இவரது முகமே மக்களுக்குத் தெரியாதே!

எஸ். ராஜேந்திரன், மதுரை: 'கவர்னர் என்பவர், மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்...' என்று, திருமாவளவன் கூறுகிறாரே?

உங்கள் நேரத்தை அனாவசியமாக செலவழித்துக் கொண்டிருக்கிறீர்கள்... சென்ற நேரம் திரும்பக் கிடைக்காது... இவர்களது அறிக்கைகளையும், பேச்சுக்களையும், பேட்டிகளையும் படித்து, நேரத்தை வீணடிக்காதீர்கள்!

* ஜெ. ஜாஸ்லின் ஜோசப், களியக்காவிளை, குமரி: போதைப் பொருள் வைத்திருப்போருக்கு, மரண தண்டனை விதிக்கும் சட்டம், நம் நாட்டில் அமல்படுத்தினால் என்ன?

சில அரபு நாடுகளில் இச்சட்டம் அமலில் உள்ளது... இதே போன்ற சட்டத்தையும் இங்கு கொண்டு வரலாம்... அப்போது இந்த பிரச்னை, தீர்வுக்கு வரும்!

என். நித்தின் பரமேஷ், ஆலங்குளம்: 'டாஸ்மாக்' மதுபான கடைகளை மதியம், 2:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை திறந்தால் மட்டும் குடிகாரர்களின் எண்ணிக்கை குறைந்து விடுமா?

குறையாது... 'ஸ்டாக்' வாங்கி வைத்துக் கொள்வர்... எனக்குத் தெரிந்த, 'ரிட்டயர்' ஆன ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி, காலை விடிந்ததுமே, 'ஆரம்பித்து' விடுகிறார்... அவரிடம், 'ஸ்டாக்' உள்ளது... இதுபோல் தான், மற்ற குடிகாரர்களும்!

* சா. சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம், நெல்லை: தி.மு.க.,வை சேர்ந்த, 85 வயதுடைய முதியவர் ஒருவர், ஹிந்தி திணிப்பதாகக் கூறி தீக்குளித்து, இறந்து விட்டாராமே...

மிகவும் மூளை மிக்கவர்... 85 வயதுக்குப் பிறகு என்ன சம்பாதிக்க முடியும் என்று யோசித்திருக்கிறார்... இப்படி செத்தால், தன் குடும்பத்திற்கு, சில லட்சங்கள், அரசு நிவாரண நிதி கிடைக்குமே என்பதால், இந்த முடிவெடுத்துள்ளார்!

கி. திலகர், ஈரோடு: டில்லி மாநகராட்சி தேர்தலில், காங்கிரசின் தோல்வி பற்றி?

இனி, எந்த தேர்தலிலும், இதுதான் அவர்களுக்கான, 'ரிசல்ட்!' குஜராத்தில், எதிர்க்கட்சியாகக் கூட வர முடியவில்லையே!






      Dinamalar
      Follow us