sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : டிச 25, 2022

Google News

PUBLISHED ON : டிச 25, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ம. தேவன், பெங்களூரு: விமானம் கிளம்பும்போது, பணிப்பெண்கள், பாதுகாப்பு முறைகளை விளக்குவதை, பெரும்பாலான பயணியர் கவனிப்பதே இல்லையே...

விமானத்தில் பயணிக்கும் பயணியர் அடிக்கடி கேட்டிருப்பர்... அதனால், கவனிப்பதில்லை... நானும் கவனிக்க மாட்டேன்!

* எஸ். ராஜம், திருச்சி: 'டிவி' விளம்பரங்களில், அந்த கம்பெனி உரிமையாளர்களே நடிக்கின்றனரே...

தங்களைத் தாங்களே விளம்பரம் செய்து கொள்வதற்கும், லட்சக்கணக்கில், நடிகர் - நடிகைகளுக்கு செலவு செய்ய வேண்டாமே என்பதற்காகவும் தான்!

* பொ. பாலாஜி கணேஷ், சிதம்பரம்: சசிகலாவை, 'தியாகத் தலைவி' என்று கூறுகின்றனரே... என்ன தியாகம் செய்தார்?

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்தாரே, அதனால், தியாகத் தலைவி என்று அழைக்கின்றனர்!

என். ஆசைத்தம்பி, சென்னை: மகனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறேன்... மருமகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

மாமனார் என்ற, 'கெத்'தைக் காட்டாமல், பெற்ற மகளை எப்படி நடத்துவோமோ, அதேபோல், மருமகளையும் நடத்துங்கள்... கூட்டுக் குடும்பமே சந்தோஷமாக இருக்கும்!

க. கதிரேசன், சென்னை: 'வரும் சட்டசபை தேர்தலில், புதுச்சேரியிலும், தி.மு.க., ஆட்சி அமைக்கும்...' என்கிறாரே, தமிழக முதல்வர் ஸ்டாலின்...

ம் ஹும்! புதுச்சேரியில் தி.மு.க.,விற்கு ஓட்டளிக்கும் அளவுக்கு மக்களிடம் செல்வாக்கில்லை!

மா. அர்விந்த், பாப்பான்குளம், தென்காசி: வரப்போகும், லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை எதிர்க்க, எதிர்க்கட்சிகள் ஒன்றிணையுமா?

ஒன்றிணைவதற்கு வாய்ப்பே இல்லை... அடுத்தும், இதே ஆட்சி தான் தொடரும்... மோடி தான் அடுத்த பிரதமரும்!

ராம். ஆதிநாராயணன், தஞ்சை: 'குஜராத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்று தான்...' என்று பேசியிருக்கிறாரே, திருமாவளவன்...

இதையே தான், எதிர் வரும் லோக்சபா தேர்தல் முடிவுக்கு பிறகும் சொல்லப் போகிறார்!






      Dinamalar
      Follow us