sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜூலை 30, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.கே. மகேந்திரவர்மன், சாலைப்புதுார்: 'டாஸ்மாக்' கடைகளுக்கு, வாரம் ஒருநாள் விடுமுறை விடுவதால், மது விற்பனை குறைந்து விடுமா?

ம் ஹூம்... குறையவே குறையாது. மதுப் பிரியர்கள், விடுமுறை நாளுக்கு முந்தைய நாளே, மதுவை வாங்கி, 'ஸ்டாக்' வைத்துக் கொள்வரே!

எம். மீனாட்சி, எட்டயபுரம்: எதிர்க்கட்சிகள், பாட்னா, பெங்களூரு என்று சந்தித்துக் கொள்கிறார்களே... ஏதேனும் பயன் இருக்குமா?

பயன் ஒன்றும் இல்லை. அப்படியே, 2024 தேர்தலில் வெற்றி பெற்றாலும், பிரதமர் யார் என்ற போட்டியில், கூட்டணி உடைந்து விடும்!

கே. நாராயணன், மதுரை: என் நண்பன் யாரையாவது குறை கூறிக் கொண்டே இருக்கிறானே... அவனை எப்படி திருத்துவது?

திருத்தவே முடியாது. பிறரைக் குறை கூறும் உங்கள் நண்பருடன் இனியும் பழகாதீர்கள். மீறி பழகினால், அவரது தீய குணங்கள் உங்களுக்கும் வந்து விடும்!

க. சரவணன், சென்னை: அறங்கள் செய்வதில் சிறந்தவர்கள் ஆண்களா, பெண்களா?

சில அறங்கள் செய்வதில், ஆண்களை விட பெண்கள் தான் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அதிலும், அஹிம்சை தான் முக்கியமான ஒன்று!

* கி. ராம், மதுரை: பணம் சம்பாதிக்க விரும்புகிறேன். அதற்கு என்னிடம் முதல் தகுதி என்னவாக இருக்க வேண்டும்?

பல தகுதிகள் இருந்தபோதும், முதல் தகுதியாக, ஒழுக்கம் வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, ஒழுக்கத்தை விற்று விடக்கூடாது!

ஜி. சண்முகம், மதுரை: மகத்தான செயல்களை செய்ய மனம் விரும்புகிறது... நான் என்ன செய்தால், அதை செய்ய முடியும்?

முதலில் பொறாமையை கை விட வேண்டும்... பின்னர் மகத்தான செயல்களை செய்து விட முடியும்!

எஸ். நாதன், நெல்லை: வாழ்க்கையில் நான் வெற்றி பெற வேண்டும் என, நினைக்கிறேன். என்ன செய்ய வேண்டும்?

உண்மையின் பாதையில் செல்லுங்கள். தானாக கிடைக்கும் வெற்றி!

* மு. வினாயகம், நெல்லை: திருப்தியான வாழ்க்கை என்று, எதைச் சொல்லலாம்?

வெறுப்பில்லாத இதயம் வேண்டும்; வாடாத புன்னகை வேண்டும்; எவரையும் புண்படுத்தாத சொற்கள் வேண்டும். இதுதான் திருப்தியான வாழ்க்கை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us