sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்

/

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : செப் 11, 2011

Google News

PUBLISHED ON : செப் 11, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

** ஜெ.சந்திரா, சென்னை: என் தோழிகள் எப்போதுமே என்னைப் புகழ்ந்து தள்ளுகின்றனரே...

இப்படிப்பட்டவர்களிடம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்மை அறியாமலேயே நம்மிடம் மண்டைக் கனத்தையும், தற் பெருமையையும் உண்டாக்கி விடுவர். மண்டைக்கனம் ஏற்பட்டு விட்டால், உங்களையே, நீங்கள் கெட்டிக்காரியாக நினைக்க ஆரம் பிப்பீர்கள்... அதே போல, தற்பெருமை ஒரு மனிதனை அழித்து விடும்; ஜாக்கிரதை!

***

*மு.ராஜசேகர், திண்டுக்கல்: 'டிவி' நேயர்களின் போக்கு, இப்போது எப்படி உள்ளது?

போரடிக்கும் புரோகிராம்கள், 20 செகண்டுகளுக்கு மேல் விளம் பரங்கள் வரும் நேரங்கள்... 'கிளிக், கிளிக்' என சேனலை மாற்றி விடுகின்றனர், 'ரிமோட்' மூலம். விளம்பரதாரர்களுக்கு பெருத்த நஷ்டம்!

***

** ஆர்.பாஸ்கர், அரக்கோணம்: இப்போ தெல்லாம் ஆண்களை, பெண்கள் மதிப் பதில்லையே...

ஆணுக்கு ஈடாக பேசினால், பதிலளித்தால், 'மதிக்கவில்லை' என்று சொல்லி விடுவீர்களே... கண் தெரியாத, காது கேட்காத, வாய் பேசாத மண் புழுவாக - அடிமைகளாக பெண்கள் இருக்க வேண்டும் என்பதுதானே பெரும் பாலான ஆண்களின் விருப்பம்!

***

*பி.பரமசிவம், கடலூர்: வெட் கக்கேடான சமாச்சாரம் ஏதேனும் கூறுங்களேன்...

சொல்லவே கூச்சமாக இருக்கு... இருந்தாலும் கேட்டுட்டீங்க... சொல்றேன்... நூத்துக்கு, இருபது பெண்கள், தமக்கு சொந்தமில்லாத ஆண்களுடன், 'உறவு' வைத்துக் கொள்வது போல கற்பனை செய்து மகிழ்வு கொள்கின்றனராம்... நல்ல வேளை... இது, அமெரிக்கப் பெண் களிடையே நடந்த கருத்துக் கணிப்புதான்!

***

* ஆர்.செல்வி, மதுரை: என் மகனை எந்தத் தொழில் துறையில் இறக்கலாம்... யோசனை கூறுங் களேன்...

தரகர் - புரோக்கர் - கமிஷன் - ஏஜென்ட்... இதெல்லாம் பழைய பெயர்கள்... இப்பெயர்களை கவுரவக் குறைவாக நினைக்க ஆரம்பித்து, 'மீடியேட்டர்' என தங்களது தொழில் பெயரை மாற்றி கொண்டுள்ளனர் இத்தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள். இவர்களின் தொழில்தான், 'மினிமம் ரிஸ்க்'கில் ஏராளமாக, சுலபமாக காசு பார்க்கும் தொழி லாக உள்ளது.

***

*எஸ்.யோகலட்சுமி, சிவ கங்கை: பெரும்பாலான நடிகைகள், தொழில் அதிபர் களையே திருமணம் செய்து கொள்வதன் ரகசியம் என்ன?

தொழிலுக்கும், வியாபாரத் துக்கும் வித்தியாசம் தெரியாத சில பத்திரிகை - பத்திரிகையாளர் களின் அறியாமையே, நடிகைகள், 'தொழில்' அதிபர்களை மட்டுமே திருமணம் செய்து கொள்ளும் சேதி. இந்த பத்திரிகைகளுக்கு, ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வியாபாரம் செய்யும் கடை வைத்திருப்பவர்களும் தொழிலதிபர்கள்தான். சினிமா தியேட்டர் உரிமையாளர்கள், பாத்திரக்கடை - ஜவுளிக் கடை அதிபர்கள் கூட தொழில் அதிபர்கள் தான்!

***

*எஸ்.சாத்தப்பன், கோவை: பாத்திரங்களை தேய்த்து கழுவக் கூட, 'டிஷ் வாஷர்' என்ற பாத்திரம் துலக்கும் கருவி வந்து விட்டதாமே!

எப்போதோ வெளிநாடுகளில் வந்து விட்டது... நம் நாட்டில் இப்போது பிரபலமாகி வருகிறது. ஏற்கனவே, நம்ம ஊர் பெண்மணிகள், 'போஷாக்' கானவர்கள். இது போன்ற கருவிகளும் வந்து, இனி, அவர்களை மேலும் செழுமை யானவர்களாக மாற்றி விடும்.

***






      Dinamalar
      Follow us