தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : டிச 09, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 09, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆங்காங்கே..

அவ்வப்போது படித்த, கேட்ட செய்திகளை அவிழ்த்து விடுகிறேன்...

* சென்னையின் பிறந்த நாள் எது தெரியுமா? ஆகஸ்ட் 4, 1639. அன்றுதான் சென்னப்ப நாயக்கன் நம் சென்னை மாநகரை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்ததாக, 'சென்னை வரலாறு' நூல் கூறுகிறது.

* சிதம்பரம் நடராஜர் கோவிலின் விமானத்தின் கூரையில், 21 ஆயிரம் பொன் ஓடுகளை, 72 ஆயிரம் பொன் ஆணிகளால் அடித்துப் பொருத்தி இருக்கின்றனர். நாம் தினம் 21 ஆயிரம் தடவை மூச்சு விடுவதாகவும், நம்முடைய உடம்பில், 72 ஆயிரம் நரம்புகள் இருப்பதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

* தமிழகத்தின் எல்லைகள் முன் காலத்தில் வட வேங்கடம் — குமரியாக இருந்தது. வட வேங்கடம் (திருப்பதி) ஆந்திராவோடு சேர்ந்து விட்டதால், தற்போது திருத்தணி வட எல்லையாக இருப்பதால், தமிழ் நாட்டில் வடக்கே குமரனும் (முருகன்), தெற்கே குமரியும் (கன்னியாகுமரி) எல்லை தெய்வங்களாக இருந்து, தமிழகத்தை காத்து வருகின்றனர். வடக்கே குமரனும், தெற்கே குமரியும் இருப்பது பொருத்தமல்லவா?

* சென்னை பிராட்வே சாலையை அமைத்தவர் பாபம்ஸ் பிராட்வே என்பவர். அவர் பெயரால் அது பாபம்ஸ் பிராட்வே என்று அழைக்கப்பட்டு வந்தது. இப்போது பாபம்ஸ் தொலைந்து வெறும் பிராட்வேயாகக் காட்சி தருகிறது.

* திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர் - கும்பினிப்பேட்டை. ஆனால், இந்த ஊருக்கும், பிரிட்டிஷாருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. தெருவின் ஒரு பக்கமோ, ஆந்திராவைச் சேர்ந்தது; மறுபக்கம், தமிழ்நாட்டைச் சேர்ந்தது. இந்த விசித்திர ஊர் அரக்கோணத்திலிருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ளது.

* மதுரை மாவட்டத்தில் சில வட்டாரங்களில், மாந்தோப்புகளில் மாம்பழங்களை விலைக்கு எண்ணிப் போடும்போது, 'போலீஸ் மாங்காய்-5' என்று கொசுறு போடுவது வழக்கம். மாம்பழம் ஏற்றிச் செல்லும் போது வழியில் தென்படும் போலீஸ்காரர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு இந்த மாங்காய்களாம்!

* காரைக்குடியில் ஒரு கோவில் நுழைவாயிலில், 'நடையன்கள் இங்கே பாதுகாக்கப்படும்' என்று எழுதப்பட்டுள்ளது. காலணி, மிதியடி என்ற வழக்கமான சொல்லுக்குப் பதிலாக, புதுமையாக இப்படி நடையன்கள் என்று எழுதியுள்ளதாக நினைக்க வேண்டாம்... செட்டி நாட்டில், காலணிகளை, நடையன்கள் என்றும் சொல்வராம்!

* வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி ஆகிய ஐந்து ஆறுகள் இங்கே பிரிவதால், இவ்வூர் திரு+ஐ (ஐந்து)+ஆறு என்றாகி, அது திருவையாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் நாத பிரம்மம் தியாகராஜர் சமாதி உள்ளது.

* நெல்லை மாவட்டத்தில் தான் எத்தனை சமுத்திரங்கள். ஆனால், அவற்றில் ஒன்றில் கூட அலைகளைக் காண முடியாது. அனைத்தும் ஊரின் பெயர்கள்...

அம்பா சமுத்திரம். கோபால சமுத்திரம். வடமலை சமுத்திரம். ரவண சமுத்திரம். ரங்க சமுத்திரம்.

***

'ஒரு முறை தாயைச் சுற்றி வலம் வந்து வணங்கினால், ஆயிரம் முறை கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும். 90 வயதான என் தாயை நான் இன்னும் தினமும் வணங்கி வருகிறேன்...' என்று கூறிய வாரியார், அவையோரை நோக்கி, 'எத்தனை பேர் தாயை வணங்குகிறீர்கள்?' எனக் கேட்டார்.

ஒரு சிலர் கைகளை உயர்த்தினர். 'நாளை எவ்வளவு பேர் வணங்குவீர்கள்?' எனக் கேட்டார். எல்லார் கைகளும் உயர்ந்தன. ஒரே ஒரு சிறுவனின் கையைத் தவிர.

'ஏனப்பா, இவ்வளவு தூரம் நான் தாயன்பின் உயர்வைப் பற்றிக் கூறியும் நீ வணங்க மறுக்கிறாய்?' என்று அவனைக் கேட்டார் வாரியார்.

அச்சிறுவன் எழுந்து, 'நான் எப்படி ஐயா வணங்குவேன்? எனக்குத்தான் அம்மாவே இல்லையே...' என்று கூறியதும், வாரியாரின் கண்கள் கலங்கி விட்டன.

அவனை அருகழைத்து, தன் மாலையை அவனுக்கு அணிவித்து, 'நீ தினமும் உன் அன்னை படத்தை வணங்க வேண்டும் - செய்வாயா?' என அவர் வினவ, கண்ணைத் துடைத்துக் கொண்டு சம்மதம் தெரிவித்தான் பையன்.

— வாரியார் நூல் ஒன்றில் படித்தது!

எம்.ஆர்.ராதா எழுதிய ஒரு கட்டுரை படித்தேன். அதில் —

ஜெயில்லே நானே சமைச்சுக்குவேன். குலாப்ஜாமூன், ஜாங்கிரி, இட்லி எல்லாம் öŒ#துக்கு@வன். என் கூட வெள்ளைக்கார கைதி இருந்தார். இட்லியை மட்டும் அவருக்குக் கொடுப்பேன். நான் செய்து கொடுத்த இட்லியை புகழ்ந்து, அவருடைய சம்சாரத்துக்குக் கூட லெட்டர் போட்டார் அவர்.

என் இட்லிக்குக் கூலியா, திட்டுறதுக்கு சில வார்த்தைகளை மட்டும் அவர்கிட்டே கேட்டு கத்துக்கிட்டேன். அவங்க நாட்டை பத்தியெல்லாம் கேட்கும் @பாது, பொறுமையா பதில் சொல்வார்.

'வக்கீல்களே ஜட்ஜா வர்றது சரியா?'ன்னு அவர்கிட்டே கேட்டேன்.

'அதுதானே வழக்கம்?' என்றார் அவர்.

'உங்க நாட்டிலேயும் அப்படித்தானா?' என்றேன்.

'ஆமா!'ன்னார்.

'முப்பது வருஷமா பொய் சொல்றதையே பிழைப்பாக கொண்ட ஒரு வக்கீல், பதவி உயர்வுங்கிற பேரிலே ஜட்ஜ் ஆனதும், எல்லாரும் அவரை கடவுளுக்கு சமம்ன்னு சொல்றாங்களே... இது நியாயமா?'ன்னு கேட்டேன்.

அதுக்கு அவர் பதில் பேசவேயில்லை.

— ராதா கேட்பதில் நியாயம் இருக்கா?

***

சென்னையிலுள்ள பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ஒருவரை சந்திக்க லென்ஸ் மாமா சென்றிருந்தபோது, நானும் உடன் சென்றேன்.

அங்கே போனது தான் தாமதம்... 'ஹச்சு... ஹச்சு...' என, தும்ம ஆரம்பித்தார் லென்ஸ் மாமா.

அப்போது டாக்டர் சொன்னார்... 'மூக்கினுள் ஒவ்வாத பொருள் ஒன்று நுழையும் போது, அதை வெளியே துரத்த நம் உடம்பு செய்கிற வித்தை தான் தும்மல். நுரையீரலில் இருந்து காற்று வேகமாகவும், திடீரென்றும் மூக்கு, வாய் வழியாக வெளியேறுவதால் பலூன் வெடிப்பது போல் அப்படியொரு சப்தம்.

'தும்மல் ஒரு அனிச்சைச் செயல். மூக்கினுள் ஆகாத பொருள் நுழையும்போது, உடனே அதை வெளியேற்ற, மூளை எடுக்கும் நேரடி நடவடிக்கை தான் தும்மல்.

'தும்மும் போது மனிதர்களின் முகம் ஏன் அஷ்ட கோணலாக மாறுகிறது தெரியுமா? நுரையீரலிலிருந்து தும்மலுக்கான காற்று வெளியே வேகமாக அனுப்பப்படுகிறது. நுரையீரலில் காற்றழுத்தம் குறைகிறது. புதுக்காற்றை உள் வாங்கி தும்மல் உருவாகிறது.

'மூச்சை உள்ளுக்கு இழுக்கிற போது, மூக்கினுள் உட்கார்ந்திருக்கிற எதிரியும், காற்றோடு காற்றாக உள்ளே போய் விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த, 'அஷ்ட' கோணல்.

'தும்மலுக்கான காற்றை உள்ளே இழுக்கிறோம். காற்று சேர்வதற்கு தாமதமானால் மூளை தும்மலை, 'கான்சல்' செய்து விடும். அப்போது, தும்மல், வந்த மாதிரி வந்து, வராத மாதிரி போய் விடுகிறது.

'தூசு, வைரஸ் கிருமிகள் மட்டுமல்லாமல், அலர்ஜி, ஜலதோஷம் காரணமாகவும் தும்மல் வருகிறது. பனியால் தும்மல்; வானத்தை அண்ணாந்து பார்த்தால் தும்மல்; அதிக வெளிச்சத்தைப் பார்த்தால் தும்மல் - இப்படி தும்மலில் பல வகை உண்டு.

'சிலருக்கு தும்மல் ஒரு, 'ரிலீப்'பைக் கொடுக்கும். அதற்காக துணியைத் திரித்து மூக்கினுள் விட்டு தும்மலை ஏற்படுத்திக் கொள்வர்...' என்றார்.

லென்ஸ் மாமாவைத் திரும்பிப் பார்த்தேன்... தன் கர்சீப்பை திரித்துக் கொண்டிருந்தார்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us