sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜன 04, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 04, 2015


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரபல சிரிப்பு நடிகர் ஒருவர், லென்ஸ் மாமாவின் தோழர். சமீபத்தில் ஒரு நாள், மாமாவுக்கு போன் செய்து, 'மாமா... வேண்டப்பட்ட குட்டி நடிகை ஒருவரை, படம் புடிச்சு, பத்திரிகைகளில் வெளியிட்டு, விளம்பரம் தேடித் தரணும். பொண்ணு இப்போ ரெண்டு படத்துல சின்ன வேஷத்திலே நடிக்குது... எப்படியாவது ஹெல்ப் செய்யுங்க...' எனக் கேட்டுக் கொண்டார்.

நடிகைகளை படம் எடுப்பது என்றால், லென்ஸ் மாமாவிற்கு பிறக்கும் உற்சாகத்தை சொல்லவும் வேண்டுமா?

'ஓ எஸ்... ஐ அம் ரெடி... எப்போ எடுக்கணும் சொல்லுங்க...' எனக் கேட்டு, முகூர்த்த நாள் ஒன்றையும் குறித்து, என்னிடம் வந்தார்.

'மணி... நீயும் கண்டிப்பா வரணும்... நடிகைகளை நான் போட்டோ பிடிக்கும் கலையை நீயும் தெரிஞ்சுக்கணும்...' என்றார்.

'ஏதுடா இது வம்பாப் போச்சே...' என மனதிற்குள் எண்ணி, மறுத்தும், விடவில்லை. படம் பிடிக்கும் தினத்தில் வம்படியாய் இழுத்துக் கொண்டு ஸ்டுடியோ சென்று விட்டார்.

குறிப்பிட்ட நேரத்தில் நடிகையும், அவருடன் வேலைக்காரி போன்ற தோற்றத்தில் ஒரு பெண்மணியும் வந்து சேர்ந்தனர்.

'வணக்கம் சார்... நான் தான் மம்தா... (நடிகர் பெயர்) சார் அனுப்பி வச்சார்...' என்றார் நடிகை.

குழைந்தபடி லென்ஸ் மாமாவும் வணக்கம் சொல்லி, 'என்ன குழந்தே(!) 'மேக்கப்'போட வந்துட்டே?' எனச் சலித்துக் கொண்டார்.

'மேக்கப்பை அழிச்சுடவா சார்?'

'இப்போ வேணாம். 'மேக்கப்'புடன் இரண்டு, மூன்று டிரஸ்சில் படம் எடுத்துடுவோம். அப்புறம், 'மேக்கப்'ப கலைச்சுட்டு படம் எடுக்கலாம்...' என்றார்.

ராட்சத குடைகளில், 'பிளாஷ் லைட்'டுகள் பொருத்தப்பட்டு இருந்தன; தலைக்கு மேலே ஒரு, 'பிளாஷ் லைட்' இருந்தது. அவற்றை, 'லைட் ரீடிங் மீட்டரில்' சோதனை செய்து பார்த்தார் மாமா.

'என்னப்பா... 17 தானே காட்டுது... 18 வேண்டுமே...' என உதவியாளரிடம் கூறியபடி, லைட்டிங் இடங்களை மாற்றி அமைத்தார். பின்னர் சோதனை செய்து, 18 வருகிறது என உறுதி செய்து கொண்டார். (இந்த, 17,18 விவகாரங்கள் உங்களைப் போலவே எனக்கும் என்னவென்று புரியவில்லை!)

நடிகை அணிந்துள்ள ஆடையின் வண்ணத்திற்கு, 'மேட்ச்' ஆகும், 'பேக் டிராப்' திரைச் சீலையை தொங்க விடப் பணித்தார்.

பின்னர், 'போஸ்' கொடுக்க நடிகையை அழைத்தார்.

'இப்படி நில்லும்மா... இப்படித் தலையை திருப்பும்மா... லேசா சிரிம்மா...' என உத்தரவுகளைப் பிறப்பித்து, தான் நினைத்த, 'போஸ்' கிடைத்ததும், 'தட்ஸ் இட்! அப்படித்தான், அப்படித்தான்...' எனக் கூறியபடியே படம் பிடித்துத் தள்ளினார்.

அடுத்த உடை சல்வார் கம்மீஸ்... அதை அணிந்து வந்ததும், 'இடது புற தோள் தெரிவது போல படம் எடுக்க போறேம்மா... அப்படியே மேலாடைய ஒதுக்கிக்கம்மா...' என்றார்; நடிகையும் அதே போல் செய்தார்.

'பாப்பா... பிரா நாடா தெரியுது பாரு... வல்கரா இருக்கும் படத்திலே, அதையும் ஒதுக்கி விடும்மா...' என்றார்; அதையும் நடிகை செய்தார்.

அடுத்து, முகத்தில் தண்ணீரை, 'ஸ்ப்ரே' செய்து, முகமெல்லாம் அரும்பாக வியர்த்து இருப்பது போல ஒரு, 'எபக்ட்' கொண்டு வந்தார். பின்னர் நடிகையிடம், 'பாப்பா... இப்போ கொடுக்க வேண்டிய போஸ் என்னான்னா... உன் காதலனை எதிர் நோக்கி தாபமா காத்திருப்பது போல இருக்கணும். கண்கள் செருகியது போல, உதடுகள் இரண்டும் பிரிந்து, லேசாக வாய் திறந்து இருப்பது போல, அத்துடன் இடது கையால் கேசத்தை லேசாக சுருட்டிக் கொண்டிருக்க வேண்டும்...' என்றார்.

'சரி சரி...' என தலையாட்டிய நடிகைக்கு, மாமா சொன்னது போன்ற, 'எக்ஸ்பிரஷனை' முகத்தில் கொண்டு வர முடியவில்லை. சிரிப்பும், வெட்கமும் தான் வந்தது. காரணம், நடிகையுடன் வந்தவர் வேலைக்காரி இல்லையாம் அம்மாவாம்; பின்னர் தெரிந்து கொண்டேன்.

கம்மிங் பேக் டு த பாயின்ட்... நடிகையுடன் வந்தவர், படம் எடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்ததால், நடிகை வெட்கப்படுகிறார் என்பதை புரிந்து கொண்ட மாமா, அவரை வெளியேறச் சொன்னார்.

கடுகடுப்புடன் வெளியேறினார் நடிகையின் அம்மா.

அடுத்த படம், ஆண்களின் நீளமான சட்டையை, முட்டி வரை அணிந்து, வேறு ஆடை ஏதும் இல்லாமல் இருப்பது போல எடுக்க வேண்டும். நடிகை அதே போன்ற சட்டை எடுத்து வந்திருந்தார்.

ஆனால், கோபத்தில் இருந்த தாயார், 'கிளாமர் போஸ் எல்லாம் வேண்டாம் சார்...' என லென்ஸ் மாமாவிடம் கூற, சூடானார் லென்ஸ் மாமா. 'என்னாங்க... இன்னிக்கு டாப் ரேஞ்சுல இருக்கிற நடிகைகள் எல்லாம், 'கிளாமர் போஸ்' குடுக்குறாங்க...' என மாமா கூறவும், தாயார், 'பாப்புலரான பிறகு அதுபோல போஸ் கொடுக்கலாம்...' என, தன் தத்துவத்தை உதிர்க்கவும், 'பேக்-அப்' சொல்லி திரும்பிப் பார்க்காமல் வெளியேறினார் லென்ஸ் மாமா!

வித்தியாசமான அனுபவம் தான்!

அவர் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர்; 70களின் கடைசி வரை அவருக்கு மார்க்கெட் இருந்தது. அவர் நடிப்பை சில படங்களில் பார்த்து பிரமித்துப் போயிருக் கிறேன். 'சட்'டென கோபம் வந்து விடக்கூடிய, 'ஷார்ட் டெம்பர்ட் மேன்' என பொன்னையாவும், சினிமா தொடர்புடையவர்களும் அவரைப் பற்றி கூறக் கேட்டு இருக்கிறேன்.

என் இருப்பிடத்தில் இருந்து, அலுவலகத்திற்கு செல்லும் வழியில் அடிக்கடி அவரைப் பார்ப்பதுண்டு. காலில் செருப்புகூட இல்லாமல் நடந்து செல்வார். சில நேரங்களில் சைக்கிளில் செல்வதையும் கண்டதுண்டு.

இதை எழுதுவதற்கு சில நாட்களுக்கு முன், ஆங்கில மருந்துக் கடை ஒன்றின் வாசலில் வண்டியை நிறுத்தச் சொன்னார் மாமா.

'உடம்புக்கு என்ன?' என்றேன்.

'எனக்கு என்ன குறை... வீட்லே மாமிக்கு தான் கொஞ்சம் உடல் நல குறைவு...' என்றார்.

'அடடே... மாமாவுக்குக்கூட குடும்பப் பொறுப்பு வந்துடுச்சு போல இருக்கே...' என எண்ணியபடி, சாலையின் எதிர்புறம் பார்த்தால், 'அந்த' நடிகர்.

ஆட்டோ ஒன்றை நிறுத்தி, சவாரிக்கு அழைத்தார்... 'ஆட்டோ வராது...' என்பது போல ஓட்டுனர் சைகை செய்து, செல்வதை காண முடிந்தது. நடிகர், அடுத்த ஆட்டோவுக்காக காத்திருக்கவும், லென்ஸ் மாமாவிடம் விஷயத்தைச் சொல்லி, 'நாம் அவருக்கு ஒரு, 'டிராப்' கொடுக்கலாமா?' எனக் கேட்டேன். ஒப்புக்கொண்ட மாமா, நடிகரிடம் சென்று, அறிமுகம் செய்து, ஒப்புதல் பெற்று என்னை அழைத்தார். வண்டியை திருப்பி இருவரையும், 'பிக்-அப்' செய்து, அவரது வீட்டுக்கு வழி கேட்டு வண்டியைச் செலுத்தினேன்.

லென்ஸ் மாமா, அந்துமணி கேரக்டர்கள் அவருக்கு மிகப் பரிச்சயப்பட்டு போயிருந்தது, அவரது பேச்சில் இருந்து தெரிந்தது. 'நீங்க, அவங்க ரெண்டு பேரையும் பார்த்து இருக்கீங்களா... எப்படி இருப்பாங்க, எப்படிப் பழகுவாங்க?' என்று கேட்டார்.

சிரிப்பையே பதிலாக்கினோம். 'சிரிக்கிறதைப் பார்த்தா நீங்கதான் அவங்களா?' என்றார்.

அதற்கும் சிரிப்பே!

மிக நீண்ட நேரம் கம்யூனிசம் பற்றியும், மார்க்ஸ் தத்துவம் பற்றியும் பேசினார்.

'எதுவுமே நிரந்தரமானது அல்ல... இன்று இருப்பது நாளை இருக்காது...' என்ற மார்க்சின் தத்துவத்தை விளக்கினார்.

'நிரந்தரமானது ஒன்றே ஒன்று என்கிறான் மார்க்ஸ்; அது என்ன?' எனக் கேட்டார்.

பதில் தெரியவில்லை. அவர் கூறியும் ஒரே சிரிப்பு!

அந்த பதிலை தெரிந்து கொள்வதில் உங்களுக்கும் ஆர்வமிருக்கும்; மார்க்ஸ் தத்துவம் படித்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us