sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூன் 27, 2021

Google News

PUBLISHED ON : ஜூன் 27, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா - கே

கல்லுாரி மாணவியான வாசகி ஒருவர், என்னை சந்திக்க, அலுவலகம் வந்திருந்தார். பல விஷயங்கள் பேசியவர், சர்தார்ஜி + பொது அறிவு சம்பந்தமான தகவலை கூற ஆரம்பித்தார்:

'டிவி' சேனல் ஒன்றில், 'கோடீஸ்வரன்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், சர்தார்ஜி.

ஒரு கோடியை வெல்ல தயாரானார். கேள்விகள் கேட்கப்பட்டன.

சரித்திரத்தில் இடம்பெற்ற நுாறு ஆண்டு போர் எவ்வளவு காலம் நடந்தது?

அ)116 ஆ)99 இ)100 ஈ)150

யோசித்த சர்தார்ஜி, மிரண்டு போனார். இது, முதல் சுற்று கேள்வி என்பதால், 'சாய்சில்' விட்டு விட்டார்.

பனாமா தொப்பிகள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகின்றன?

அ)பிரேசில் ஆ)சிலி இ)பனாமா ஈ)ஈக்வேடார்

இந்த கேள்விக்கு அதிகம் யோசித்து, மிரண்டு போய் தொலைபேசியை பயன்படுத்தினார்.

உற்ற நண்பனின் உதவியுடன் சரியான விடையை சொல்லி விட்டார், சர்தார்ஜி.

ரஷ்யர்கள் எந்த மாதத்தில் அக்டோபர் எழுச்சியை கொண்டாடுவர்?

அ)ஜனவரி ஆ)செப்டம்பர் இ)அக்டோபர் ஈ)நவம்பர்

இந்த கேள்விக்கு முகம் வெளிறி, அடுத்த கேள்வியையும் கேட்க சொன்னார்.

கீழ்கண்டவற்றில் எது ஜார்ஜ் 4ம் மன்னனின் முதல் பெயர்?

அ)எடர், ஆ)ஆல்பர்ட் இ)ஜார்ஜ் ஈ)இமானுவேல்

இதற்கு, 50 - 50க்கு, 'சாய்ஸ்' எடுத்தார்.

பசிபிக் கடலில் இருக்கும் கானெரித் தீவு. அந்த பெயரை எந்த விலங்கின் பெயரிலிருந்து பெற்றது?

அ)கானெரி ஆ)கங்காரு இ)பப்பி ஈ)எலி

கடைசி கேள்வியை கேட்டவுடன், உண்மையிலேயே முகம் வெளிறி, கலங்கிய கண்களுடன் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார், சர்தார்ஜி.

எப்படி நம்ம சர்தார்ஜியின் மூளை.

விடை உங்களுக்கு தெரிந்தால், கீழே உள்ள விடைகளோடு சரிபார்த்துக் கொள்ளுங்கள், என்றார்.

அவரே சொல்லட்டும் என்று காத்திருந்தேன்.

இது தான் விடைகள்:

* நுாறு ஆண்டு போர் நடந்த காலம், 116 ஆண்டுகள் - நீங்கள் நினைப்பது போல், 100 அல்ல.

* பனாமா தொப்பிகள், ஈக்வேடார் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன - நீங்கள் நினைப்பது போல், பனாமாவில் அல்ல.

* அக்டோபர் எழுச்சியை ரஷ்யர்கள் கொண்டாடுவது, நவம்பர் மாதம், அக்டோபர் அல்ல.

* ஜார்ஜ் 4ம் மன்னனின் முதல் பெயர் ஆல்பர்ட் - ஜார்ஜ் அல்ல.

* கானெரித் தீவின் பெயரை, 'பப்பி' என்ற விலங்கிலிருந்து பெற்றது - 'கானெரி'யிலிருந்து அல்ல.

இன் அலாரியா கானெரி என்றால், லத்தீனில், 'பப்பிகளின் தீவு' என்று அர்த்தம்.

'சரி, இப்போ சொல்லுங்க... யார் முட்டாள், சர்தார்ஜியா...' என்றார்.

நான் மையமாக சிரித்து வைத்தேன்.



கடந்த, 1990ல், எழுத்தாளர், சுஜாதா எழுதிய, கட்டுரையின் ஒரு பகுதி இது:

எதிர்காலத்தில் நீங்கள் யாரும் ஆபீசுக்கு போக வேண்டாம். ஒரு டெலிபோன், ஒரு கணிப்பொறி போதும். 'வீட்டில் அலுவலகம்' என்கிற சித்தாந்தம், பரவி வருகிறது.

இப்போது, மொத்தம், 3.5 கோடி பேர், வீட்டை விட்டு நகராமல் ஆபீஸ் நடத்துகின்றனர். 1994ல், 5 கோடி பேர் வீட்டில் இருக்கப் போகின்றனர். அடுத்த நுாற்றாண்டு துவங்கும் முன், அமெரிக்காவில் பாதி பேர் வீட்டை விட்டு நகராமலே, ஆபீசில் வேலைகளை பரிபாலனம் செய்யப் போகின்றனர். இது எதனால்?

'டெக்னாலஜி, பர்சனல் கம்ப்யூட்டர்' எனும், சொந்த கணிப்பொறி சின்னதாக மடியில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு, ஏன், கைக்குள் அடங்கும் டயரி அளவுக்கு கூட வந்து விட்டது.

விரல் நுனியில், உலகத்தின் எந்த மூலையில் இருப்பவர்களிடமும் பேச முடியும். ஆபீசுக்கு போனால், நாம் எல்லாரும் என்ன வேலை பார்க்கிறோம்?

அன்று காலை, தபால்களை பார்க்கிறோம். மேலதிகாரி டெலிபோனில் கூப்பிடுவார். சில சமயம், நேரே வரச்சொல்வார். பிறகு, ஆபீசில், கோப்புகளை பார்க்க வேண்டும். கடிதம் எழுத வேண்டும். ஊழியர்களுடன் பேச வேண்டும். வெளியுலகத்தில் உள்ள மற்ற நிறுவனங்களுக்கு கடிதம் எழுத வேண்டும்.

நடு நடுவே, டீ, காபி சாப்பிட வேண்டும். கேன்டீனில் போய், சாப்பாடு, கொஞ்சம் அரட்டை, கொஞ்சம் துாக்கம்.

இது எல்லாமே, 'டெக்னாலஜி' வளர்ச்சியில், வீட்டை விட்டு ஒரு அங்குலம் நகராமல், சாத்தியமாகப் போகிறது. முதலிலிருந்து பார்க்கலாம். அன்றைய கடிதங்கள் எல்லாவற்றையும் வாங்கி, உங்கள் சம்பந்தப்பட்டதை மட்டும், உங்கள் வீட்டுக்கு அனுப்பிவிட முடியும்.

அடுத்து, மேலதிகாரியுடன் பேச, இருக்கவே இருக்கிறது மொபைல் போன். நேரில் பேச வேண்டுமெனில், ஆபீசுக்கு போகாமல், வீட்டிலிருந்து பேச, 'டெலி கான்ப்ரன்சிங்' என்கிற சாதனம் வந்திருக்கிறது. உங்கள் முன் ஒரு சின்ன வீடியோ கேமரா. உங்கள் முகம் அவர் கம்ப்யூட்டர் திரையிலும், அவர் முகம், உங்கள் திரையிலும் தெரியும்.

ஆபீசில், நீங்கள் எழுத வேண்டிய கடிதங்களை, நீங்களே, 'டிக்டேட்' செய்யலாம். உங்கள் குரலை அடையாளம் கண்டு, வார்த்தைகளாக பிரித்து, அதை, 'டைப்' அடித்துக் கொடுக்கக் கூடிய திறமை, இன்று கம்ப்யூட்டருக்கு வந்து கொண்டிருக்கிறது அல்லது உங்கள் கடிதத்தை நீங்களே கணிப்பொறியின் திரையை பார்த்து, அதன் விசைப் பலகையில் அடித்து அமைக்கவும் முடியும். இதற்கான சொல் தொகுப்பு வசதியும் கணிப்பொறிகளில் உண்டு.

ஆபீசில் உள்ள கோப்புகளை, அலமாரி அலமாரியாக, அறை அறையாக சேர்த்து வைக்க வேண்டிய அவசியமில்லை.

'காம்பாக்ட் டிஸ்க்' என்று சொல்கின்றனரே, லேசர் ஒளி தகடு. லட்சக்கணக்கான கடிதங்களில் உள்ள சமாசாரங்களை, அதில் சேமித்து வைக்கும் வசதியும் வந்து விட்டது.

ஆபீஸ் பழைய பைல்களில் உள்ளதை எல்லாம் வரவழைத்து பார்க்க, 'டாக்குமென்ட் இமேஜ்' என்கிற புதிய தொழில்நுட்பம் வந்து விட்டது.

இதனால் ஏற்படக்கூடிய சிக்கனங்கள் அளவில்லாதவை. ஆபீசுக்கு போகும் பெட்ரோல் மிச்சமாகும். பஸ்களில் கூட்டமிராது. நகரங்களில், போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். காற்று மாசு குறையும்.

குளிர் காலத்தில், அலுவலகத்துக்கு நீங்கள் செல்ல வேண்டாம். அலுவல் உங்கள் வீட்டுக்கு வந்து சேரும்.

ஒரே ஒரு சிக்கல். நாள் முழுவதும் மனைவியுடனேயே இருக்க வேண்டும்.

முப்பது ஆண்டுகளுக்கு முன், எழுத்தாளர், சுஜாதா குறிப்பிடும், கணினி தொழில்நுட்பம் அனைத்தும், அதற்கு மேலும், இன்று சாத்தியமாகி உள்ளது. இதுதவிர, கணினியும், அதன் பயன்பாடும் நாளுக்கு நாள் பல விந்தைகளை ஏற்படுத்தி வருவதையும் நினைக்கும்போது, ஆச்சரியமாக இருக்கிறது.






      Dinamalar
      Follow us