தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மே 07, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

நண்பர் ஒருவருடன், 'பீச்'சுக்கு போயிருந்தேன். என்னை விட அவர் எப்பவும் சுறுசுறுப்பா, துறுதுறுன்னு எதையாவது செய்துக்கிட்டே இருப்பார். அப்போதும் அப்படித்தான்.

அவருடைய வாய் தான் என்னிடம் பேசிக்கிட்டிருந்தது; மணலை குவித்து, கோபுரம் மாதிரி பண்ணிக்கிட்டே இருந்தது, அவரது கைகள்.

கோடை விடுமுறையில், குடும்பத்தினர் ஊருக்கு போயிருக்கிறதால, வீட்டுல தனியா இருக்கப் பிடிக்காத பலர், வீட்டை பூட்டிக்கிட்டு இப்படி, 'பீச்'சுக்கு வந்து உட்கார்ந்துடறாங்க, எங்களை மாதிரியே...

'மணல்ல என்னங்க பண்ணிக்கிட்டிருக்கீங்க...'ன்னு கேட்டேன்.

'பிரமிடு கட்டிக்கிட்டிருக்கேன்...' என்றார்.

'நீங்க எகிப்துல பிறந்திருக்க வேண்டிய ஆள் சார்...' என்றேன்.

'ஏன்?' என்றார்.

'அங்க தான், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன், நைல் நதிக்கரை ஓரமா பிரமாண்டமான பிரமிடுகள்லாம் கட்டி வச்சிருக்காங்க...' என்றேன்.

'ஆமாம்பா மணி. பிரமிடு என்றதும், சில விஷயங்கள் நினைவுக்கு வருது...' என்று சொல்ல ஆரம்பித்தார்:

அந்த நாட்டு ராஜாக்கள்லாம், செத்துப் போனா அவங்க உடம்பை, பிரமிடுக்குள்ள பாதுகாப்பா வச்சுடுவாங்க. எப்பவாவது ஒருநாள் அவங்களுக்கு உயிர் வந்து விடும் என்ற நம்பிக்கை அவங்களுக்கு உண்டு.

இது என்ன மூடநம்பிக்கைன்னு கேட்கத் தோணும்.

ஆனா, அந்த பிரமிடுகளை, விஞ்ஞானப்பூர்வமா ஆராய்ச்சி பண்ணி பார்க்கிறவங்க, மூக்கு மேல விரலை வைக்கிறாங்க; அதில், நிறைய விஷயம் இருக்கிறதா சொல்றாங்க.

ராஜா செத்துப் போனா, அவரை மட்டும் உள்ளே வைக்கிறது இல்லை. ஏராளமான நகை, அடிமைகள், குதிரைகள் எல்லாத்தையும் உயிரோடு வச்சு மூடியிருக்காங்க.

சரி, இதெல்லாம் உண்மையா இருக்குமான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக சிலர் துணிந்து, அதை உடைச்சுக்கிட்டு உள்ளே போய் பார்த்தாங்க.

அங்கே, ராஜா உடம்பையெல்லாம் பதப்படுத்தி தங்கப் பெட்டிக்குள்ள வச்சிருக்காங்களாம். பக்கத்துல ராஜாவோட வேலைக்காரங்க, குதிரைகள் எல்லாம் எலும்புக்கூடா இருந்ததாம்.

ஜான் வில்சன்னு ஒரு ஆராய்ச்சியாளர், பிரமிடுக்குள்ள ஏராளமான அறிவியல் உண்மைகள் இருக்குன்னார். உலக உருண்டையோட நீள - அகலத்தை அடிப்படையா வச்சு, கணித சாஸ்திர நிபுணர்கள் தான், இந்த பிரமிடுகளை கட்டியிருக்கணும்ன்னு கண்டுபிடிச்சிருக்காங்க.

அதுக்குள்ள இறந்தவர்கள் உடலை வைத்தால், ரொம்ப காலத்துக்கு அது அழியாம இருக்குமாம்.

கால்டாக்டர் பால்ன்னு ஒரு ரேடியோ இன்ஜினியர், பிரமிடு நீள - அகல அடிப்படையில, சின்னதா ஒரு கார்ட்போர்ட்டில் பிரமிடு உருவாக்கினார்.

அதோட தென் துருவம் - வட துருவம், இதோட கோணங்களை சரியா பார்த்து, அந்த திசையில வச்சார். இப்ப, அந்த சின்ன பிரமிடுக்கு கூட சக்தியை அதிகப்படுத்தற ஆற்றல் வந்துள்ளது.

அதை நிரூபிக்கிறதுக்காக, ஒரு ஷேவிங் பிளேடை அதுக்குள்ள வச்சார். அதை எடுத்து முகச்சவரம் பண்ணினார். மறுபடியும் அதுக்குள்ள வச்சார். சாதாரணமா மூன்று அல்லது நான்கு முறைதான் அந்த பிளேடால ஷேவ் செய்ய முடியும். ஆனா, இந்த பிரமிட் மாடலுக்குள்ள வச்சு எடுக்கற பிளேடு, 100 முறை பிரமாதமா ஷேவ் பண்ண முடிந்ததாம்.

கார்த்தி குரோகில்ன்னு ஒருத்தர், பிரமிட் உள்ளே வைக்கிற பொருளோட விஷத்தன்மையை அது மாத்திடுதுன்னு நிரூபிச்சு காட்டினார்.

சின்ன பிரமிடுக்குள்ள, காபியை, 20 நிமிஷம் வச்சார். அப்புறம் அதை எடுத்து பரிசோதனை பண்ணினார். காபின்ங்கிற விஷத்தன்மை முழுசா குறைஞ்சிருந்ததை பார்த்து, ஆச்சரியப்பட்டார்.

அல்ய்ஸ்டர்ன்னு இன்னொரு ஆராய்ச்சியாளர். ஒரு ராத்திரி முழுக்க எகிப்துல உள்ள பிரமிடுக்குள்ள போய் தங்கியிருந்து பார்த்தா என்னன்னு யோசிச்சார்.

ஒருநாள் துணிஞ்சு உள்ளே போயிட்டார். முழுவதுமா மூடியாச்சு. சின்ன துவாரம் கூட இல்ல. உள்ளே ஒரே இருட்டு. கொஞ்ச நேரத்துல ரொம்ப போரடிச்சு, ஒரு மெழுகுவர்த்தியை கொளுத்தி வைத்துள்ளார்.

தன்னிடம் இருந்த ஒரு லெட்டரை எடுத்து படிச்சுக்கிட்டிருந்தார். அப்போ தற்செயலா மெழுகுவர்த்தி அணைஞ்சுட்டுது. ஆனாலும், அவரு இருந்த இடத்துல லேசா வெளிச்சம் இருந்துக்கிட்டே இருந்ததாம். அந்த வெளிச்சத்துல லெட்டரை பார்த்தார். எழுத்தெல்லாம் முன்னாடி இருந்ததை விட தெளிவா தெரிந்ததாம்.

மெழுகுவர்த்தியால உண்டாக்கப்பட்ட வெளிச்சம், அது அணைஞ்சதுக்கு அப்புறமும் நிலைத்து நிற்குதுன்னா, அதற்கு காரணம் பிரமிடு கட்டியிருக்கிற அமைப்புதான்ங்கிறார், அவர்.

சோதனைக்காக, 1975ல், அமெரிக்காவுல ஹவுஸ்டன்ங்கிற இடத்துல, 75 அடி உயரத்துல ஒரு பிரமிடுடை கட்டினாங்க.

சக்தி இழந்த பேட்டரி செல்லை அதுக்குள்ள கொஞ்ச நாள் வச்சிருந்தாங்க. மறுபடியும் எடுத்து உபயோகப்படுத்தி பார்த்தா, அது எல்லாம் புது செல் மாதிரி ஆயிட்டுதாம்.

சாப்பிடற ஆகாரத்தை உள்ளே வச்சு பார்த்தாங்க. ரொம்ப நேரம் கெடாம இருந்திருக்கு. தண்ணீர் சுவை அதிகமாவுது. விதைகளின் முளை விடும் தன்மை விரைவா நடக்குதாம்.

ஆக, பிரமிடுங்கிறது விஞ்ஞானப்பூர்வமா உருவாக்கப்பட்ட கட்டடங்கள்ங்கிறது, இப்ப தெரிஞ்சு போச்சு.

அதனால, அங்கே இருக்கிற உடம்புக்கெல்லாம் உயிர் வந்துடும்ன்னு நினைச்ச அவங்க நம்பிக்கையை கூட நாம அலட்சியப்படுத்த முடியாது. நாளைக்கு என்ன நடக்குமோ, யாருக்கு தெரியும்.

- இவ்வாறு கூறி முடித்தார், நண்பர்.

இருள் கவிய துவங்கவே, 'பீச்'சிலிருந்து கிளம்பினோம்.



ஒருவர் தினமும், சாயந்தரம் வீட்டுக்கு வந்தவுடனே, 'எடுக்கட்டுமா, கோர்க்கட்டுமா...' என்பார்.

உடனே அவர் மனைவி, ஒரு ஊசியையும், நுாலையும் அவரிடம் கொடுப்பாங்க.

இவரு அந்த ஊசியில நுாலை கோர்த்துக் கொடுக்கணும். அதுக்கப்புறம் தான் அவருக்கு சாப்பாடு போடுவாங்க. ஊசியில நுாலை கோக்கலேன்னா, சாப்பாடு, 'கட்!'

இதைப் பார்த்து, 'ஏன் இப்படி பண்றீங்க?'ன்னு கேட்டாங்க, பக்கத்து வீட்டு அம்மா.

'அவர், தண்ணி போடாம நிதானத்துல வந்திருக்காரான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக இந்த டெஸ்ட்...'ன்னு சொல்லியிருக்காங்க.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us