PUBLISHED ON : ஜூலை 24, 2016

அ நிறம் | அளவு
'இயற்கையை, சுற்றுச்சூழலை பாதுகாத்து, பராமரிக்க வேண்டும்...' என்று வலியுறுத்தினால், பெரும்பாலானோரின் காதுகளில் அது விழுவதே இல்லை. இயற்கை வளங்களை அழித்தே தீருவது என, கங்கணம் கட்டி செயல்படுவோர் மத்தியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது, ஒரு நாய்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த, சாந்த்ரா கில்மோர் என்ற பெண், 'டபி' என்ற நாயை வளர்த்து வந்தார். இந்நாய், பிளாஸ்டிக் பாட்டில்களை எங்கு கண்டாலும், கவ்வி வந்து சாந்த்ராவிடம் கொடுக்கும். 13 வயதாகும் இந்நாய், இதுவரை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து, 2011ல் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இந்த இயற்கை நேசன், சமீபத்தில் இறந்து விட்டது.
— ஜோல்னாபையன்.
