PUBLISHED ON : ஜூலை 24, 2016

பழம்பெரும் மலையாள, 'கார்ட்டூனிஸ்ட்' டோம்ஸ்; இவர், சமீபத்தில், தன், 84ம் வயதில் காலமானார். இவரது, 'போபனும் - மோளியும்' என்ற முழு பக்க கார்ட்டூன், 'மலையாள மனோரமா' வார இதழில் வெளியானதை தொடர்ந்து, அவ்வார இதழுக்கு லட்சக்கணக்கான வாசகர்கள் உருவாகினர்.
முப்பது ஆண்டுகள் கார்ட்டூனிஸ்டாக இருந்த இவர், இளமையில், குட்டநாடு என்ற குக்கிராமத்தில் வாழ்ந்த போது, பக்கத்து வீடுகளில், போபன் - மோளி என்று இரு வாலு பையன்கள் இருந்தனர். அவர்கள் செய்யும் குறும்புகளை வைத்து தான், கார்ட்டூன் வரைந்தார். அவர்கள் இன்று முதியவர்களாகி விட்டனர்.
சமீபத்தில், கோட்டயத்தில் டோம்ஸ் மரணமடைந்த போது, போபனும், மோளியும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கார்ட்டூனிஸ்டுக்கு, ஆறு குழந்தைகள்; தன் குழந்தைகளில் இருவருக்கு போபன் - மோளி என, பெயர் வைத்துள்ளார்.
— ஜோல்னாபையன்.
