PUBLISHED ON : ஜூலை 24, 2016

அ நிறம் | அளவு
கொய்யாப் பழத்தில், நீர், 76 சதவீதம், மாவு - 15, புரதம் - 15, கொழுப்பு - 0.2, கால்சியம் - 0.01, பாஸ்பரஸ் - 0.04 சதவீதமும், இரும்புச்சத்து ஒரு யூனிட்டும், விட்டமின் சி, 300 யூனிட்டும் உள்ளது. தொடர்ந்து இதைச் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தை சுத்திகரித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. அத்துடன், தலைவலிக்கும் தீர்வு காணலாம்.
மேலும், அஜீரணக் கோளாறு, வயிற்றுப் போக்கு மற்றும் கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் புண்களை குணப்படுத்தும்.
எந்த பழமானாலும், முதலில், தண்ணீரில் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு போட்டு கழுவிய பின், சாப்பிடவும்.
