PUBLISHED ON : ஜூலை 24, 2016

அ நிறம் | அளவு
கடந்த, 27 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை கம்யூ., கட்சி ஆட்சி புரிந்த நிலையில், தற்போது, மம்தா ஆட்சி நடக்கிறது. ஆனாலும், மேற்கு வங்கம் இன்னும் பழமை மாறாமல் உள்ளது. இன்றும், கோல் கட்டா வீதிகளில், கை ரிக் ஷாக்களில் மனிதர்களை உட்கார வைத்து இழுத்துச் செல்லும் காட்சியை பார்க்க முடிகிறது. கம்யூ., ஆட்சியின் போது, அப்போதைய முதல்வர் புத்ததேவ் பட்டாசாரியா, கை ரிக் ஷாக்களுக்கு தடை விதித்தார். இதனால், ஏராளமான ரிக் ஷா வாலாக்கள் வேலையின்றி தவித்தனர். ஆனாலும், அவர்கள் தங்கள் வண்டிகளை கை விடவில்லை. பின், மம்தா ஆட்சிக்கு வந்த போது, பேட்டரி பொருத்திய ரிக் ஷா ஓட்ட அனுமதி அளித்தார்; ஆனால், இதை எல்லாம் ரிக் ஷா வாலாக்கள் பொருட்படுத்தவில்லை. இப்போதும், சாலைகளில், கை ரிக் ஷாக்கள் உருண்டோடுகின்றன.
— ஜோல்னாபையன்.
