தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/ஐஸ்கிரீம் சாப்பிடப் போகிறீர்களா?

ஐஸ்கிரீம் சாப்பிடப் போகிறீர்களா?

ஐஸ்கிரீம் சாப்பிடப் போகிறீர்களா?


PUBLISHED ON : ஏப் 09, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 09, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐஸ்கிரீமை விரும்பாதவர்கள் எவரேனும் உண்டா... ஆனால், ரசாயனம் கலந்து தயாரிக்கப்படும் ஐஸ்கிரீமில் உள்ள ஆபத்தை அறிந்தால், ஐஸ்கிரீம் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டோம்.

ஐஸ்கிரீமில், பழ வாசனையை ஏற்படுத்த, 'அசிட்டால் டிஹைடு' என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது; இது, புற்றுநோய் ஊக்கியாக மாறும் தன்மை கொண்டது. மேலும், நச்சாக செயல்படவும் வாய்ப்புண்டு; உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, பார்கின்சன் பாதிப்பு ஏற்படுவதற்கும் காரணமாவதாக கூறுகின்றனர்.

ஐஸ்கிரீம் உறைந்து போகாமல் இருப்பதற்காக கலக்கப்படும், 'அமைல் அசிட்டேட்' என்ற ரசாயனம், ரப்பர், சிமென்ட், பெயின்ட் மற்றும் தின்னர் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் பொருளாகும்.

ஈதல் அசிட்டேட் ரசாயனம் - பைனாப்பிள், பென்சில் அசிட்டேட் - ஸ்ட்ராபெர்ரி, பைப்ரினால் - வென்னிலா சுவைகளை வழங்கக்கூடியது. அத்துடன், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, 'பொட்டாசியம் சோர்பேட்' என்ற ரசாயனமும் சேர்க்கப்படுகிறது. இதுவும் புற்றுநோய் ஊக்கியாகும்.

இது, டி.என்.ஏ.,வில் கலந்து, நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.

நீர்த்த நிலையில் இருக்கும் திரவத்தை, கூழாக மாற்ற, பாலி சோர்பேட் என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது; இது, சோப்பு, ஷாம்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதுவும், நோய் எதிர்ப்பு சக்தியை சிதைக்கிறது.

சோள சர்க்கரை சாறு, அதிக இனிப்பு தன்மையை கொடுப்பதோடு, சர்க்கரை நோயை உண்டாக்கும். குழந்தைகளிடம் நடத்தை மாற்றுப் பிரச்னையையும் ஏற்படுத்தும். சுவைக்காக சேர்க்கப்படும் வனஸ்பதி, கவர்ச்சியான நிறத்தை கொடுக்க சேர்க்கப்படும், பல செயற்கை நிறமிகள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பவை.

அடுத்த முறை, உங்கள் குழந்தை ஐஸ்கிரீம் கேட்கும் போது, சற்று யோசித்து முடிவெடுங்கள்.

வீட்டிலேயே பல விதமான ஐஸ்கிரீம்கள் செய்து, சாப்பிட்டு, உடல் நலத்தை காத்துக் கொள்ளுங்கள்!

குல்பி!

தேவையான பொருட்கள்:

கொழுப்பு நீக்கப்படாத பால் - 2 லிட்டர்

பாலாடை - ஒரு கப்

சர்க்கரை - 300 கிராம்

பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி - தலா 50 கிராம்

லெமன் ஜூஸ் மற்றும் மஞ்சள் நிற புட் கலர் - சில துளிகள்

குல்பி எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி

காய்ச்சி ஆற வைத்த பால் - 1 டம்ளர்

ஐஸ் குச்சிகள் - சிறிதளவு

சோள மாவு - ஒன்றரை மேஜை கரண்டி

செய்முறை: காய்ச்சி ஆற வைத்த பாலுடன், சோளமாவை சேர்த்து, கரைத்துக் கொள்ளவும். கொழுப்பு நீக்கப்படாத பாலை, சுண்டக்காய்ச்சி, சர்க்கரை சேர்த்து, ஓரளவு திக்காக வந்ததும், சோளமாவு கலந்த பாலை சேர்க்கவும். பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரியை மிக்சியில் ஒன்றாக போட்டு ஒன்றும், பாதியுமாக அரைத்து, கொதிக்கும் பாலுடன் கலந்து, அடுப்பை அணைத்து இறக்கவும்.

பின், பாலாடை, குல்பி எசன்ஸ், புட் கலர் சேர்த்து, சிறிதளவு நெய் பூசிய குல்பி மோல்டில் ஊற்றவும். கலவை பாதியளவு செட்டானதும், அதனுள், ஐஸ் குச்சியை செருகவும். பின், கலவை முழுதும் செட்டானதும் பரிமாறவும். எசன்ஸ் கிடைக்காவிட்டால், ஏலக்காயும், புட் கலருக்கு பதிலாக, குங்குமப்பூவும் சேர்க்கவும்.

ப்ரூட்ஸ் அண்ட் சேமியா கஸ்டர்ட்!

தேவையான பொருட்கள்:

பால் - இரண்டு கப்

கஸ்டர்ட் பவுடர் - 3 தேக்கரண்டி,

சேமியா - கால் கப்

சர்க்கரை மற்றும் நட்ஸ் - தேவைக்கேற்ப

பழக்கலவை - ஒரு கப்

செய்முறை: சேமியாவை லேசாக வறுத்து, வேக

விடவும். வெந்த சேமியாவில், அதிகப்படியான தண்ணீர் இருந்தால், வடித்து விடவும். ஒரு டம்ளர் பாலை, அடுப்பில் வைத்து காய்ச்சவும்; மீதமுள்ள பாலில், கஸ்டர்ட் பவுடர் மற்றும் சர்க்கரையை கரைக்கவும். பால் பொங்கி வரும் போது, கஸ்டர்ட் பவுடர் கரைசலை அதில் ஊற்றி, குறைந்த தீயில் கிளறவும். பின், வெந்த சேமியாவை சேர்த்து, கிளறி இறக்கவும். ஆறியதும், பழங்களை சேர்த்து, குளிர வைத்து பரிமாறவும்; விருப்பப்பட்டால், நட்ஸ் வகைகளையும் சேர்க்கலாம்.

மேங்கோ ஐஸ்கிரீம்!

தேவையான பொருட்கள்:

பால் - இரண்டு லிட்டர்

சர்க்கரை - 600 கிராம்

கார்ன் பிளவர் - 1 மேஜைக்கரண்டி

ஆறிய பால் - கால் கப்

தண்ணீர் - கால் கப்

ஜெலட்டின் - இரண்டு தேக்கரண்டி

மாம்பழக் கூழ் - அரை லிட்டர்

மாம்பழ எசன்ஸ் - இரண்டு தேக்கரண்டி

பிரஷ் கிரீம் - அரை லிட்டர்

செய்முறை: முதலில், பாலை, சர்க்கரையுடன் சேர்த்து, நன்றாக காய்ச்ச வேண்டும். பின், பாலை ஆற வைத்து, ஜெலட்டினை சேர்த்து, பின், கார்ன்பிளார் மாவு சேர்த்து கொதிக்க விட வேண்டும். ஆறிய பின், எக் பீட்டர் கொண்டு நன்றாக அடிக்க வேண்டும். இக்கலவையை, பிரிட்ஜில், 'செட்' செய்து கொள்ள வேண்டும். பின், மாம்பழக் கூழ், எசன்ஸ் மற்றும் பிரஷ்கிரீம் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாக, எக் பீட்டர் கொண்டு அடித்து, பிரிட்ஜில், 'செட்' செய்து சாப்பிடவும்.

என்.குமரகுருபரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us