PUBLISHED ON : ஏப் 26, 2020

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படத்தில் இருப்பவர், 'மந்த புத்தியான எழுத்தாளர்' என்று, எழுத்தாளர், சல்மான் ருஷ்டியால் கிண்லடிக்கப்பட்ட, பீட்டர் ஹான்ட்கெ. 2019ல், இலக்கிய படைப்புக்கு, நோபல் பரிசு பெற்றவர். சிறு வயதில், தந்தையை இழந்ததால், தாய் மறுமணம் செய்தார். குடிக்கு அடிமையான இரண்டாவது தந்தை, போதையில் செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இவரது துயர வாழ்க்கை, ஆழ்ந்த சிந்தனையுடைய எழுத்தாளர் ஆக்கியது. பள்ளி பருவத்தில், தான் சந்தித்த கசப்பான உண்மைகளுக்கு, எழுத்து வடிவம் கொடுப்பதை, தன் பாணியாக மாற்றி கொண்டார்.
ஜோல்னாபையன்.