PUBLISHED ON : ஜூன் 03, 2018

அண்டை நாடான, சீனாவைச் சேர்ந்தவர், லியு யெலின்; இவருக்கு, 50 வயதாகிறது. 23 வயதில், இரண்டு மகன்கள் உள்ளனர்; இரட்டையர்கள்.
யெலின், தன் மகன்களுடன், வெளியில் செல்லும்போது, 'இவங்க இரண்டு பேரும், உங்க பாய் பிரண்டா...' என்று தான், பெரும்பாலானோர் கேட்கின்றனர். அந்த அளவுக்கு, இளமையுடன் காட்சியளிக்கிறார், யெலின்.
'ஷாப்பிங், சினிமா போன்றவற்றுக்காக வெளியில் செல்லும்போது, பலர், இதே கேள்வியை கேட்கும்போது, தர்மசங்கடமாக இருந்தாலும், மனதுக்குள், மகிழ்ச்சியாக இருக்கும்...' என, சிலிர்ப்புடன் கூறுகிறார், யெலின்.
'நீச்சல் தான், என் பொழுது போக்கு; இதைத் தவிர, தினமும், யோகா பயிற்சி செய்கிறேன். சாப்பிடுவதில் கட்டுப்பாடுகள் இல்லை.
மேக் - அப் போடுவதிலும் ஆர்வம் இல்லை...' என கூறும் யெலின், சமூக வலைதளங்களில், தன் புகைப்படங்களை பதிவிட்டு, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
—ஜோல்னாபையன்.
