
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேரள மாநிலம், காசர்கோட்டை சேர்ந்தவர், அமிர்தா ஜோஷி, 25; பொறியியல் பட்டதாரி. தன் பைக்கில் தன்னந்தனியாக உலகம் சுற்றி வருகிறார்.
சிறுவயதில் இருந்தே பைக்குகள் மீதான அலாதி ஆர்வமுள்ளவர். திடீரென அவரது தந்தை இறந்ததும், அந்த துயரத்தை மறக்க, பைக்கில் ஊர் சுற்ற துவங்கினார். அப்படி தான், உலகம் சுற்றும் அளவுக்கு தன்னை மாற்றிக் கொண்டார்.
இன்று, பல நாடுகளுக்கு தன் பைக்கில் சென்று வந்துள்ளார். இளம் பெண் தன்னந்தனியாக ஊர் சுற்றுவதாக, பலர் ஏளனம் செய்தபோதும், அதை பொருட்படுத்தாமல், தன் லட்சியத்திலேயே கவனமாக இருக்கிறார்.
தனியாக பயணிப்பதால் பாதுகாப்புக்காக, 'பெப்பர் ஸ்பிரே' வைத்துள்ளார். ஆனால், இதுவரை யாரிடம் இருந்தும் எந்த தொல்லையும் ஏற்பட்டதில்லை என்கிறார், புதுமைப்பெண், அமிர்தா ஜோஷி.
— ஜோல்னாபையன்