PUBLISHED ON : நவ 16, 2014

அ நிறம் | அளவு
ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரும், சிறந்த உடல் கட்டமைப்புக்கான மிஸ்டர் ஒலிம்பியா பட்டத்தை ஆறு முறை தட்டிச் சென்றவருமான, அர்னால்டுக்கு, அமெரிக்காவின் ஓஹாயா மாகாணத்தில், பிரமாண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நடந்த விளையாட்டு கண்காட்சியின்போது, தன் சிலையை, தானே திறந்து வைத்த அர்னால்டு, அந்த சிலையை ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தார். எட்டு அடி உயரம் உடைய இந்த சிலை, 273 கிலோ எடை உடையது.
— ஜோல்னாபையன்.
