தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அரைமணி நேர நாடகம்!

அரைமணி நேர நாடகம்!

அரைமணி நேர நாடகம்!


PUBLISHED ON : நவ 16, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 16, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரபல மர்மக்கதை எழுத்தாளர் அகதா கிரிஸ்டி, 1947ல் எழுதிய நாடகம் ஒன்று இன்றும் லண்டனில் அரங்கேறி வருகிறது. 'அரைமணி நேரம் ஒலிபரப்ப கூடிய நாடகம் ஒன்று வேண்டும்...' என்று அகதாவிடம் பி.பி.சி., ரேடியோ நிறுவனம் கேட்டுக் கொண்டது. அவர், 'த்ரி ப்ளைன்ட் மைஸ்' என்ற நாடகம் எழுதினார். இந்த நாடகம், 1952ல் மேடை நாடகமானது. முதலில், அம்பாசிடர் தியேட்டரில் அரங்கேறியது. பின், 'தி மவுஸ் ட்ராப்' (எலிப்பொறி) என்று பெயர் மாற்றி, 'செயின்ட் மார்ட்டின்' தியேட்டரில் அரங்கேறி, இன்றும் ரசிகர்களை மகிழ்விக்கிறது. இந்நாடகத்தை சினிமாவாக தயாரிக்க, இரு தயாரிப்பாளர்கள் முன் வந்தனர். இதன் உரிமையை, 4 லட்சம் ரூபாய்க்கு வாங்கினர். ஆனால், இவர்கள் மரணமடைந்ததால், நாடகம் படமாக்கப்படவில்லை; எனவே, இன்றும் நாடகம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us