தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வடாம் போடலாம் வாங்க!

வடாம் போடலாம் வாங்க!

வடாம் போடலாம் வாங்க!


PUBLISHED ON : ஏப் 03, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 03, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரோஜாப்பூ வடாம்!

தேவையானவை: ஜவ்வரிசி - 2 கப், பன்னீர் ரோஜா இதழ்கள் - 2 கப், ரோஸ் சிரப் - 2 சொட்டு, எலுமிச்சைச் சாறு - கால் தேக்கரண்டி, உப்பு, மிளகாய் தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து, பின், ஆறு கப் தண்ணீரில் வேக விடவும். ரோஜா இதழ்களை விழுதாக்கிக் கொள்ளவும்.

விழுதாக்கிய ரோஜா, உப்பு, அரைத்த மிளகாய், எலுமிச்சைச் சாறு, ரோஸ் சிரப் அனைத்தையும், வேக வைத்த ஜவ்வரிசியுடன் சேர்த்து, அழகாய் வட்ட வட்டமாக ஊற்றி, நன்கு வெயிலில் காய வைத்து எடுக்கவும்.

வாழைத்தண்டு வடாம்!

தேவையானவை: பச்சரிசி அல்லது பச்சரிசி மாவு - அரைக் கிலோ, நார் இல்லாமல் நறுக்கிய வாழைத்தண்டு - 1 கப், பச்சை மிளகாய் - 5, பெருங்காயம் - 1 சிட்டிகை, உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: அரிசியை முதல் நாளே ஊறப்போட்டு காலையில் நன்கு கழுவி மாவாக அரைக்கவும். மாவு என்றால் முதல் நாள் இரவே தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.

வாழைத் தண்டு மற்றும் மிளகாயை அரைத்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு, பெருங்காயம் சேர்த்து, அரைத்த மாவில் கலக்கவும். கரைத்து வைத்துள்ள மாவை அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை வேக விட்டு இறக்கவும். ஆறியபின் சிறு உருண்டைகளாக பிடித்து வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும்.

பிரண்டை வடாம்!

தேவையானவை: பச்சரிசி - கால் கிலோ (மாவு அரிசியாக இருக்க வேண்டும்), பச்சை மிளகாய் - 10, ஜவ்வரிசி - 25 கிராம், நார் நீக்கிய இளம் பிரண்டை - 1 கப்.

செய்முறை: அரிசியை ஊற வைத்து மாவாக அரைத்தெடுத்து, இரண்டு நாட்கள் புளிக்க விடவும். 2 லி., தண்ணீரில் ஜவ்வரிசியை போட்டு அடுப்பில் வைத்து வேக விடவும். பாதி வெந்ததும், பிரண்டையை அரைத்து கலந்து, உப்பு, பச்சை மிளகாய் விழுதையும் கலக்கவும்.

பிறகு, அரிசி மாவை கொட்டி கொதிக்க விடவும். ரொம்பவும் தண்ணீராக ஆகிவிடாமல் அச்சில் போட்டு பிழியும் அளவிற்கு மாவை கெட்டியாக வேக விடவும். ஆறியபின் அச்சில் போட்டு பிழிந்து வெயிலில் காய வைக்கவும்.

பாசிப்பருப்பு வடாம்!

தேவையானவை: பாசிப்பருப்பு - 2 ஆழாக்கு, மிளகாய்த் துாள், சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பாசிப் பருப்பை நன்கு அலசி களைந்து ஒரு மணி நேரம் ஊற விட்டு, பின் நீரை வடித்து, நிழலில் உலர விடவும். உலர்ந்ததும் உப்பு, மிளகாய் துாள் சேர்த்து, தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும். அத்துடன் சீரகத்தை கலந்து கையில் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக கிள்ளிப் போடவும். நன்கு காய்ந்ததும் எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

வடாம் டிப்ஸ்!

காலையில் வெயில் ஆரம்பிக்கும் முன்பே வடாம் போடும் வேலையை துவங்கி விட்டால், வெயிலின் கடுமையால் வரும் தலைவலி, மயக்கம் போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம்

சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் எண்ணெயும், தண்ணீரும் கலந்து, சிறிய துணியால், பிளாஸ்டிக் பேப்பரை துடைத்து விட்டு வடாம் பிழிந்தால், காய்ந்த பின் ஒட்டாமல் வரும் என்னென்ன வடகம் வைக்கப் போகிறோம் என்று முடிவு செய்து, அவற்றுக்கு தேவையான சாமான்களை முன்கூட்டியே வாங்கி, தயாராக வைக்க வேண்டும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us