தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஏப் 03, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 03, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எங்கே தொலைத்தோம்... எங்கே தேடுகிறோம்?

என்ன தொலைத்தோம்

எங்கே தொலைத்தோம்

என்றறியாமலே எதையோ

எங்கேயோ தேடுகிறோம்

கூட்டுக் குடும்பத்தில்

குண்டு வைத்துவிட்டு

ஒற்றுமையை தேடுகிறோம்

பாட்டன் - பாட்டியை ஏன்

தந்தை - தாயை

முதியோர் இல்லத்திற்கு

வழியனுப்பி வைத்துவிட்டு

உறவுகளை தேடுகிறோம்

சிறு தானிய உணவை மறந்தோம்

மண் சட்டி மறைந்து போனது

நாகரிக உணவு உண்டு

ஆரோக்கியத்தை இழந்தோம்

இழந்ததை மிக்க செலவுடன்

மருத்துவமனையில் தேடுகிறோம்!

ஆண் - பெண் உடையிலிருந்த

கம்பீரம், நளினம் களவு போனது

புதுமையென பொருந்தாத உடைகளில்

புதுமையாய் காட்சிப் பொருளாய்

கண்ணியம் இழந்தோம்!

கடவுள் வழிபாடு

பெற்றோருக்கு மரியாதை

மற்றவர்களையும் மதிக்கும்

நற்பண்புகளை சந்ததியினருக்கு

கற்றுத்தர மறந்தோம் - நாமும்

கற்றுக்கொள்ள மறந்தோம்!

ஆணுக்கு நிகரென பெண்களும்

பணிகளில் சேர்ந்தனர் - நாளும்

பொருளீட்டி உடல் சோர்ந்தனர்

கணவன், குழந்தையின் அன்பை

வீட்டில் இழந்ததை வெளியில் தேடினர்!

கல்வியில் நேர்மை நீதிபோதனை

தர்ம வாழ்வியல் முறைகளில்

சுயத்தை தொலைத்துவிட்டு

இருக்குமிடம் அறியாமல் தேடுகிறோம்

தொலைத்துவிட்ட பொக்கிஷங்களை

தேடுவோம் அறிவுக்கு எட்டிய வரை!

ஆ. மாணிக்கம், பொள்ளாச்சி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us