PUBLISHED ON : நவ 30, 2014

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியட்நாமை சேர்ந்த நுகுயென் ஹாங் என்ற சிகையலங்கார நிபுணர், கத்திரிக்கு பதிலாக, நீண்ட வாள் மூலம், முடி வெட்டி அசத்துகிறார். வாளை அப்படியும், இப்படியுமாக சுழற்றி, வேண்டும் விதத்தில் முடிவெட்டும் இவரின் வேகத்தை பார்த்து, இவருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உருவாகி விட்டனர். அவர் கூறுகையில்,'ஒரு போட்டியில் கத்திரியை பயன்படுத்தாமல், சிறிய ரம்பத்தை பயன்படுத்தி, முடி வெட்டினேன்; இது, எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால், முறையாக பயிற்சி பெற்று, வாள் மூலம் முடிவெட்டுகிறேன். துவக்கத்தில் சிரமமாக இருந்தாலும், இப்போது பழகி விட்டது...' என்கிறார்.
— ஜோல்னாபையன்.

