sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல..

/

இதப்படிங்க முதல்ல..

இதப்படிங்க முதல்ல..

இதப்படிங்க முதல்ல..


PUBLISHED ON : செப் 06, 2015

Google News

PUBLISHED ON : செப் 06, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரூ.950 கோடி பட்ஜெட்டில் ராஜமவுலி படம்!

பாகுபலி படத்தை, 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கிய ராஜமவுலி, தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். அதை முடித்ததும், தன் கனவு படமான, மகாபாரதத்தை இயக்க உள்ளார். ஆனால், இப்படத்தை, பாகுபலி படத்தை விட, ஹாலிவுட் படங்களுக்கு, சவால் விடும் வகையில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க போவதாக கூறுகிறார். அவ்வகையில், அப்படம், 950 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் என்று தெரிவித்துள்ள ராஜமவுலி, அப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆரை நாயகனாக நடிக்க வைப்பதோடு, உலக அளவில் உள்ள சில முக்கிய நடிக, நடிகையரையும் நடிக்க வைத்து, படத்தை, உலகம் முழுக்க வெளியிடும் யோசனையில் இருப்பதாக கூறுகிறார்.

சினிமா பொன்னையா

பிகினிக்கு மாறிய இஞ்சி இடுப்பழகி அனுஷ்கா!

பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கில், பிகினி உடையணிந்து நடித்த அனுஷ்கா, அதன்பின், எந்த படத்திலும் அப்படி நடிக்கவில்லை. ஆனால், தற்போது ஆர்யாவுடன் இணைந்து நடித்து வரும், இஞ்சி இடுப்பழகி படத்தில், மீண்டும் பிகினி உடையணிந்து நடிக்கிறார். இப்படத்தில், தன் உடல் எடையை, 20 கிலோ அதிகப்படுத்தி, சின்ன வீடு கல்பனா கெட்டப்பில் நடிப்பவர், படத்தின் கிளைமாக்சில், உடல் எடையை குறைந்து, 'சிக்'கென்ற உடல் அமைப்புக்கு மாறுகிறார். அந்த கெட்டப்பில் நடிக்கும் போது தான், ஒரு பாடல் காட்சியில் பிகினியில் தோன்றப் போகிறார். காலம் அல்லாத காலத்தில் காய்த்ததாம் பேய்ச் சுரைக்காய்!

எலீசா

நிவேதா தாமஸ் போட்ட கண்டிஷன்!

பாபநாசம் படத்தில், கமலின் மூத்த மகளாக நடித்த நிவேதா தாமஸ், அதன்பின், சில படங்களில் நடிக்கயிருக்கிறார். ஆனால், கதையை ஒ.கே., செய்து, முன்பணம் வாங்கும் நேரத்தில், 'எனக்கு படிப்பு தான் முக்கியம்; நடிப்பு இரண்டாம் பட்சம் தான். அதனால், கல்லூரி இல்லாத நாட்களில் மட்டும் தான் நடிக்க வருவேன்...' என்று கண்டிஷன் போட்டார். விளைவு, அவரை முற்றுகையிட்டிருந்த இயக்குனர்கள் ஓட்டம் பிடித்து விட்டனர். இப்போது, கைவசம் படம் இல்லாமல், காற்று வாங்குகிறார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை!

எலீசா

மீண்டும் விஜய்யை இயக்கும் பிரபுதேவா!

நடன மாஸ்டராக இருந்து கதாநாயகனான பிரபுதேவா, பின், இயக்குனரானார். தமிழ் மற்றும் தெலுங்கு மட்டுமின்றி, இந்தி சினிமாவிலும் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராகி விட்டார். இந்நிலையில், கடைசியாக, அவர் இந்தியில் இயக்கிய, ஆக் ஷன் ஜாக்சன் என்ற படம், தோல்வியடைந்ததால், தற்போது அவர், 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' என்ற பட நிறுவனத்தை துவங்கி, மூன்று படங்களை தயாரித்து வருகிறார். அத்துடன், விஜய்யை வைத்தும் ஒரு படத்தை தயாரித்து, இயக்க உள்ளார். ஏற்கனவே, விஜய்யை வைத்து, போக்கிரி மற்றும் வில்லு படங்களை இயக்கிய பிரபுதேவா, இப்படத்தை அதிரடி ஆக் ஷன் கதையில் இயக்கயிருக்கிறார்.

சினிமா பொன்னையா

கறுப்பு பூனை

தளபதி நடிகர் நடித்துள்ள இரண்டெழுத்து படத்தை, அவரது பி.ஆர்.ஓ., தயாரித்திருக்கிறார். ஆனால், படத்தில் நடித்த முன்னணி நடிகர், நடிகையருக்கு மட்டுமே பேசினபடி சம்பளம் கொடுத்த அவர், மற்ற டெக்னீசியன்களுக்கு சம்பள பாக்கி வைத்து இழுத்தடிக்கிறார். இதனால், அப்படத்தில் வேலை செய்த சினிமா தொழிலாளர்கள், தினமும் அவர்களின் அலுவலகத்துக்கு நடையாய் நடக்கின்றனர்.

வம்பு நடிகருடன் மீண்டும் நடித்துள்ள தாரா நடிகைக்கு, அந்த படத்தில் நடித்ததற்காக சம்பளமே கொடுக்கப்படவில்லை. அவ்வகையில், இன்னும் இரண்டு பாடல்கள் மீதி இருக்கும் நிலையில், 'எனக்கான மொத்த தொகையையும் வெட்டினால் தான் ஸ்பாட்டுக்கே வருவேன்...' என்று அடம் பிடிக்கிறார் நடிகை. இதனால், மேற்படி நடிகரின் படம், மீண்டும் புதிய சிக்கலில் சிக்கியிருக்கிறது.

'கணுக்கால் கவர்ச்சியைக் கூட காட்ட மாட்டேன்...' என்று சொல்லி சண்டக்கோழியுடன், 'லிப்லாக்' காட்சியில் நடித்த மேனன் நடிகை, தற்போது, கவர்ச்சி கண்டிஷன்களை போடுவதில்லை. ஏக மனதோடு தாராளம் காட்டி வருகிறார். அத்துடன், நடிகர்களுடன் கேரவன் விளையாட்டுகளையும் துவங்கி விட்டார். இதனால், மேற்படி நடிகையின் பெயரைக் கேட்டாலே சீறிய நடிகர்கள், இப்போது, 'ரொமான்டிக்' மூடுக்கு மாறுகின்றனர்.

சினி துளிகள்!

* விஜய் நடித்துள்ள, புலி படத்தின் கனடா நாட்டு உரிமை மட்டும் இரண்டு கோடி ரூபாய்க்கு வியாபாரமாகி உள்ளது.

* ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் லட்சுமி மேனன்.

* தமிழில் அரை டஜன் படங்களில் நடிக்கும் நயன்தாரா, தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பரவலாக நடிக்கிறார்.

* கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கை வைத்து, சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை படமாக தயாரிக்கிறார் ஜெனிலியா.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us