/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
பெண்களைக் கடத்தி திருமணம் செய்யும் சீனர்கள்!
/
பெண்களைக் கடத்தி திருமணம் செய்யும் சீனர்கள்!
PUBLISHED ON : ஜூலை 13, 2025

சீனாவில் பாலின சமநிலையின்மை காரணமாக, திருமணத்திற்கு பெண்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர், இளைஞர்கள்.
அதாவது, 100 பெண் குழந்தைகளுக்கு 121 ஆண் குழந்தைகள் பிறப்பதால், சுமார் 3 கோடி இளைஞர்கள், திருமணமாகாமல் உள்ளனர்.
இதனால், வங்கதேசம், மியான்மர், நேபாளம், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஏழைப் பெண்கள் கடத்தப்பட்டு, 5,000 முதல் 20 ஆயிரம் டாலர்களுக்கு (1டாலர் = 87 ரூபாய்) விற்கப்படுகின்றனர்.
இதற்கென சீனாவில் பெரும் சந்தை இயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருவில் பெண் குழந்தைகளை கருக்கலைப்பு செய்யும் பழக்கமே, இந்த நெருக்கடிக்கு மூலகாரணம். இதனால், மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்தாலும், சீன அரசு இதுவரை கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை.
இருப்பினும், வங்கதேசத்தில் உள்ள சீன துாதரகம், பெண்களை கடத்தும் மோசடிகளுக்கு ஆளாக வேண்டாம் என, எச்சரிக்கை விடுத்துள்ளது.
- ஜோல்னாபையன்