தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம் (11)

நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம் (11)

நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம் (11)


PUBLISHED ON : ஜூலை 18, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசிக்கொண்டு இருந்த போது, 'மிஸ்டர் சேகர், உங்களுக்கு தமிழகத்தில் என்ன வேண்டும்...' என்று கேட்டார்.

'ஒன்றும் வேண்டாம் அம்மா. நீங்கள் நன்றாக இருந்தால், அதுவே போதும். நீங்கள், என்னுடைய, 10 நிமிட நாடகத்தைப் பார்த்து, நிறைய சிரித்தீர்கள். என்னுடைய முழு நாடகத்தையும் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து பார்க்க வேண்டும்...' என்றார்.

'வருகிறேன்...' என்றார். வரும் தேதியும், மியூசிக் அகாடமி ஹால் என்றும் முடிவாயிற்று.

மியூசிக் அகாடமிக்கு போன் செய்து, அந்த தேதியில் அரங்கம், 'புக்' செய்ய கேட்ட போது, 'அன்று, எங்கள் நிகழ்ச்சி இருக்கிறது. ஆகவே, ஹால் இல்லை...' என்றனர்.

உடனே, முதல்வரின் செயலருக்கு போன் போட்டார்.

'அப்படியா சொன்னார்கள்... ஐந்து நிமிடம் கழித்து திரும்ப போன் செய்யுங்கள்...' என்றார்.

ஐந்து நிமிடம் ஆவதற்குள், மியூசிக் அகாடமி தலைவர் டி.டி.வாசு, எஸ்.வி.சேகருக்கு போன் செய்து, 'ஏம்பா... சி.எம்., வர்ற நிகழ்ச்சின்னு முதலிலேயே சொல்லியிருக்க வேண்டியதுதானே...' என்று சொல்லி, அரங்கத்தை ஒதுக்கி தந்தார்.

பெரியதம்பி நாடகத்தை முழுமையாக பார்த்து, ரசித்து சிரித்தார்.

அதே மேடையில், 75 கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

நாடக கலைஞர்களுக்கு, 50 சதவீத சலுகை கட்டணத்தில், அரசு பஸ்களில் பயணிக்க அனுமதிப்பது உள்ளிட்ட, எஸ்.வி.சேகரின் கோரிக்கைகளை அப்போதே ஏற்றார்.

அதன்பிறகு, ஜெயலலிதாவால் தான், கலைமாமணி மற்றும் கலைவாணர் விருதுகளைப் பெற்றார். மயிலாப்பூர் எம்.எல்.ஏ., ஆனார். நடிகர் நாகேஷ் கலைமாமணி வாங்கிய அதே மேடையில், அவருடன் சேர்ந்து, எஸ்.வி.சேகரும் அந்த விருது வாங்கியதை, இன்றளவும் பெருமையாக கருதுகிறார்.

ஐந்து ஆண்டு எம்.எல்.ஏ., வாழ்க்கையில், ஊழல் புரியாத, லஞ்சம் வாங்காத ஒரே எம்.எல்.ஏ., என்று, தொகுதி மக்களால் பாராட்டப் பெற்றார். பல கோடி கமிஷன் தொகை புரண்ட போதும், 10 பைசா கமிஷன் பெறாமல், பல்வேறு சமூக பணிகளை செய்து முடித்தார்.

அங்கே இங்கே என்று இருந்தாலும், அவர் மையம் கொள்ளும் இடம், நாடக மேடை தான்.

ஜெயலலிதா வந்தது, அவரது நாடகத்தின், 3,000வது காட்சி என்றால், 3,500வது மேடைக் காட்சிக்கு, அப்போது முதல்வராக இருந்த, கருணாநிதியும், காங்., தலைவராக இருந்த, மூப்பனாரும் வந்தனர். தொடர்ந்து, அவரது, 5,600வது காட்சிக்கு, முதல்வராக கருணாநிதியும், துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினும் ஒரு சேர வந்திருந்தனர்.

இவரை பற்றி அவர்

நீ என்றுமே என்னவன். நம் நட்பு ஒரு ஆல மரம். அதை, அரை பிளேடால் அறுக்க முடியாது. உன் சாதனைக்கு எல்லையே இல்லை. ஏனெனில், உன் அதிர்ஷ்டம் பற்றி நானறிவேன். வாழ்க, வளர்க, வளம் பெறுக... இயக்குனர் விசு

தொடரும்

எல். முருகராஜ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us