PUBLISHED ON : ஏப் 24, 2022

* குறைவான கலோரி மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது, வெள்ளரிக்காய். அப்படியே உண்ணத் துாண்டும் வகையில் தனிச் சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. வெள்ளரியில் உள்ள நீர் சத்து, நாக்கு வறட்சியை போக்குவதுடன், பசியை உண்டாக்கும்
* சிறுநீர் பிரிவை துாண்டச் செய்யும். இரைப்பையில் ஏற்படும் புண்ணையும், மலச்சிக்கலையும் குணப்படுத்தக் கூடியது. பித்த நீர், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளையும் குணமாக்குகிறது
* கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்வதில் சிறந்த உணவாகத் திகழ்கிறது. 100 கிராம் வெள்ளரிக்காயில், 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது
* சாதாரணமாக, வெள்ளரிக்காயை பச்சையாக கடித்துச் சாப்பிடுவது வழக்கம். இளநீரை போன்றே, வெள்ளரிக்காய்ச் சாறும் திகழ்கிறது. வயிற்றுப்புண் உள்ளோர், இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை, ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால், வயிற்றுப்புண் குணமாகும்
* காலரா நோயாளிகள், வெள்ளரிக் கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, மணிக்கு ஒருமுறை, இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்த வேண்டும்
* வறண்ட தோல் மற்றும் முக வறட்சி உள்ளோர், தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வந்தால், வறட்சித் தன்மையை போக்கும்
* நோய் எதிர்ப்பு சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கச் செய்யும். நீரிழிவு நோயாளிகள், எடை குறைய, விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும்
* வெள்ளரியில், தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன் மற்றும் குளோரின் உள்ளது. ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகம் உண்டு. ஈரல், கல்லீரல் சூட்டை தணிக்கிறது.
ஏ.ராஜன்.
