PUBLISHED ON : மே 31, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'தான் நடிகையாக ஆகியிருக்கா விட்டால், பேட்மின்டன் வீராங்கனையாக ஆகியிருப்பேன்...' என்று கூறுகிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. இது குறித்து அவர் பேசிய போது, 'பெங்களூரில், பிளஸ் 2 படித்த போது, தினமும் அப்பாவுடன் பேட்மின்டன் ஆடுவேன். அச்சமயத்தில், அப்பாவின் நண்பர் குருபிரசாத் போட்ப்பா என்னை போட்டோ எடுத்து, சில விளம்பரங்களில் நடிக்க வைத்தார்.
சினிமாவில் நடிக்க விரும்பிய போது, 'வேண்டாம்... பேட்மின்டன் வீராங்கனையானால் போதும்...' என்று மறுத்து விட்டார் அப்பா. இந்நிலையில், ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது, அம்மாதான், 'நடிக்கட்டும்; வெற்றி பெற்றால் தொடர்ந்து நடிக்கட்டும்...' என்று சொன்னார். படம் வெற்றி பெற்றது; நானும் நடிகை ஆனேன்...' என்றார் தீபிகா.
— ஜோல்னாபையன்.

