PUBLISHED ON : ஏப் 10, 2022

அ நிறம் | அளவு
அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியா மற்றும் கொலோரோடா மஜுவ் மாகாணங்களில், 32 லட்சம் கி.மீ., பரப்பளவு கொண்ட மணற்பாங்கான பகுதியில், 'ஜோஸ்வ ட்ரீ நேஷனல் பார்க்' உள்ளது. இங்கு, தண்ணீர் இல்லாமல் நீண்ட காலம் வாழும், ஜோஸ்வ மர வகை காணப்படுகிறது.
பல்லாண்டுகளுக்கு முன், அமெரிக்கா வந்து குடியேறிய, ஸ்பானிஷ் மக்கள், இந்த மரத்துக்கு, 'டெஸெர்ட் டாகர்' என்று பெயரிட்டனர். மரத்தின் இலைகள் மிகவும் கூர்மையான முட்கள் போல் இருப்பதால் அருகே சென்றாலே, காயம் ஏற்படுத்தி, ரத்தம் வரச் செய்துவிடும்.
இதனால், பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணியர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இங்கு வேறு மர வகைகள் எதுவும் இல்லை; பாறைகள் மட்டுமே காணலாம்.
இந்த முள் மரங்களை பார்ப்பதற்காகவே, சுற்றுலா பயணியர் இங்கு வருகின்றனர்.
— ஜோல்னாபையன்
